india

img

எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம் தேதி அறிவிப்பு!

எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம், பெங்களூருவில் ஜூலை 17, 18-ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் பாசிச பாஜக-வை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஜூன் 23-ஆம் தேதி நடந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதை தொடர்ந்து 2வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் ஜூலை 13, 14-ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆலோசனை கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது ஜூலை 17, 18-ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

;