india

img

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா - மாநிலங்களவையில் தாக்கல்!

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை, ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப்டம்பர் 18-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மக்களவை மற்றும் சட்டப்பேரவையில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மக்களவையில் நேற்று சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் தாக்கல் செய்தார். இதன் பின் மசோதா விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த மசோதா மாநிலங்களவையிலும் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.