india

முஸ்லிம்களுக்கு எதிராக மதவெறி விஷத்தை கக்கிய பர்வேஷ் வர்மா, சுரேந்திர ஜெயின்! நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

புதுதில்லி, அக். 11 - பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோர்  குர்ஜார், பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா, விஎச்பி-யின் இணைச் செயலாளர் சுரேந்திர ஜெயின் ஆகி யோர் முஸ்லிம்களுக்கு எதிராக மத வெறி விஷத்தை கக்கியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தில்லி சுந்தர் நாக்ரியில், கடந்த வாரம் மணீஷ் என்பவர் சிலரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை விவகாரம் தொடர்பாக சாஜித், ஆலம், பிலால், பைசான், மொஹ்சின் மற்றும் ஷகிர் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  இதனிடையே, மணீஷ் படு கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தில்லி யில், விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் உள்ளூர் இந்துத்துவா அமைப்புகள் ‘விராட் இந்து சபை’ என்ற பெயரில் கூட்டம் ஒன்றை நடத்தின. இந்தக் கூட்டத்தில், பாஜக பர்வேஷ் வர்மா எம்.பி., எம்எல்ஏ நந்த் கிஷோர் குர்ஜார், சுரேந்திர ஜெயின் ஆகி யோர் முஸ்லிம்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். லோனியைச் சேர்ந்த பாஜக  எம்எல்ஏ நந்த் கிஷோர் குர்ஜார் பேசுகையில், 2020-ஆம் ஆண்டு  வடகிழக்கு தில்லியில் ​​​​காசியாபாத், லோனியில் முஸ்லிம்களுக்கு எதி ராக வன்முறையில் ஈடுபட்டதை நினைவுபடுத்தி, “தில்லியில், குடி யுரிமைத் திருத்தச் சட்டம் (Citizenship (Amendment) Act  - CAA) காரணமாக கலவரம் வெடித்தது. அந்த நேரத்தில், இந்த  ஜிகாதிகள் (முஸ்லிம்கள்) இந்துக் களைக் கொல்லத் தொடங்கினர்.

நாங்கள் அவர்களிடம்  விளக்க மளிக்க மட்டுமே சென்றோம். ஆனால், ஜிகாதிகளைக் (முஸ்லிம் களை) கொன்றதற்காக காவல்துறை எங்கள் மீது வழக்குப் பதிவு செய்தது. ஆமாம்.. நாங்கள் ஜிகாதிகளைக் கொல்வோம். எப்பொழுதும் அவர் களைக் கொல்வோம். லோனியில் இருந்து 50 ஆயிரம் ஆட்களை வர வழைப்போம். தில்லிக்கு தேவை யான போதெல்லாம் முன்பும் அவர்கள் வந்திருக்கிறார்கள்” என்று வெறியேற்றியுள்ளார். இதேபோல பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா பேசுகையில், “முஸ்லிம்களை சமூகப் புறக் கணிப்பு செய்ய வேண்டும்” என்று  கூறியுள்ளார். “குறிப்பிட்ட சமூகத்தி னரை (முஸ்லிம்களை) முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். எங்கு அந்த குறிப்பிட்ட இன மக்களை பார்க்கிறீர்களோ அவர்களை புறக்கணிக்க வேண்டும். அவர்களி டம் வியாபார ரீதியில் எந்த பொருட் களையும் வாங்கக் கூடாது” என பர்வேஷ் வர்மா இனவெறியைத் தூண்டியுள்ளார். இந்நிலையிலேயே, பாஜக தலைவர்களின் இந்த மதவெறிப் பேச்சுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை யும் வெளியிட்டுள்ளது.  “விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அக்டோபர் 9 அன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பாஜக-வைச் சேர்ந்த மேற்கு தில்லி நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா, ‘முஸ்லிம்களை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும்’ என்று பேசியிருக்கிறார். மேலும் அவர், ‘முஸ்லிம்களிடமிருந்து எந்தப் பொருட்களையும் வாங்கக் கூடாது’ என்றும், ‘அவர்களுக்கு ஊதியம் எதுவும் அளிக்கக் கூடாது’ என்றும் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களிடம் வெளிப்படையாகவே புத்திமதி கூறியிருக்கிறார்.

 மேலும் அந்தக்கூட்டத்தில் உரை யாற்றிய விஷ்வ ஹிந்து பரிஷத்தின் இணைச் செயலாளர் சுரேந்திர ஜெயின், ‘தில்லியில் வாழும் ஓர் இனத்தினர் (முஸ்லிம்கள் என வாசிக்கவும்) தில்லியை ஒரு மினி-பாகிஸ்தானாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று கூறி எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றி இருக்கிறார். இத்தகைய பேச்சுக் கள் அனைத்தும் முஸ்லிம்களுக்கு எதிராக மதவெறி நஞ்சை உமிழும் வெட்கக்கேடான முயற்சியாகும். தில்லியில் மக்களுக்கிடையே நிலவும் மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் விதத்தில், இத்தகைய மதவெறியைத் தூண்டும் பேச்சுக் களை பர்வேஷ் வர்மா முதல் தடவை யாகப் பேசிடவில்லை. 2020-இல் தில்லியின் சட்டமன்றத் தேர்தல் நடை பெற்றபோது, தேர்தலுக்கு முன்பும் பின்பும் பல தடவைகள் அவர் கபில் மிஸ்ராவுடன் சேர்ந்துகொண்டு பேசிய பேச்சுக்கள்தான் தில்லியின் வட கிழக்குப் பகுதியில் மதவெறி வன்முறைகள் நடைபெறவும், அதில் 54 அப்பாவி உயிர்கள் பலியாக வும் காரணமாக இருந்தன. ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் நேரடியாக இய ங்கும் தில்லிக் காவல்துறையினர், அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுத்திடவில்லை. இவ்வாறு முஸ்லிம் மக்களுக்கு  எதிராக, மதவெறி நஞ்சை உமிழ்ந்து ள்ள பர்வேஷ் வர்மா, சுரேந்திர ஜெயின் மற்றும் பலர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்” என்று மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.  (ந.நி.)    

;