சர்வதேச நீதிமன்றம் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடவில்லை என்றாலும் அதன் இடைக்கால தீர்ப்பில் இடம்பெற்றுள்ள 6 அம்சங்கள் மிக முக்கியமானவை. காசாவில் இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும்; அங்கு உதவிகள் தடையின்றி செல்ல வேண்டும் என்பது தீர்ப்பு. எதிர்பார்த்தபடியே நேதன்யாகு தீர்ப்பை நிரா கரித்துள்ளார். இந்த தீர்ப்பின் அமலாக்கம் பற்றி ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் விவாதிக்கும். ஆனால், அதனை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுக்காத வகையில் நிர்ப்பந்தங்கள் அளிக்கப்பட வேண்டும்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் சுற்றறிக்கை மோடி ஆட்சியின் மனுதர்ம அடிப்படையிலான பிற் படுத்தப்பட்ட- தலித்- பழங்குடி இன விரோத சமூக கட்ட மைப்பிற்கு இசைந்த மோசமான செயலாகும். பிற்படுத்தப் பட்ட- தலித்- பழங்குடி பிரிவினரிலிருந்து தகுதியானவர்கள் இல்லையென கூறி இடஒதுக்கீடை ரத்து செய்வது ஒடுக்கு முறையிலான சாதிய அடக்குமுறையை நிரந்தரப்படுத்தும் செயல்! இந்த சுற்றறிக்கை திரும்பப்பெறப்பட வேண்டும்.