புதுதில்லி, மார்ச் 10- மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணை யம் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணை யர் அருண் கோயல் தனது பதவியை (மார்ச் 9) சனிக் கிழமை மாலை ராஜினாமா செய்தார். அவரது ராஜி னாமாவை உடனடியாக குடி யரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் ஏற்றுக் கொண்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் 1985-ஆம் ஆண்டு ஐஎஸ்எஸ் அதிகாரி பிரிவைச் சேர்ந்த வர் அருண் கோயல், 1993-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநி லம் பதிந்தா மாவட்ட ஆட்சி யராக பொறுப்பு வகித்தார்.
2010-ஆம் ஆண்டு வரை பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மத்திய அரசுப் பணியில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 37 ஆண்டுகள் ஐஏஎஸ் பணியில் இருந்த கோயல், 2022 டிசம்பர் 31-ஆம் தேதி ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, 2022 நவம்பர் 18-ஆம் தேதி விரு ப்ப ஓய்வு பெற்றார். அடுத்த நாளே நவம்பர் 19-ஆம் தேதி அவரை தேர்தல் ஆணையராக குடியரசுத் தலைவர் நியமித்தார். அது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில், தற்போது அவர் திடீரென தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார். தனிப் பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் கூறியிருந்தாலும் பாஜக- வின் அரசியல் சதிராட்டங் களில் இதுவும் ஒன்று என அரசியல் அரங்கில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. ஏற்கனவே, மற்றொரு தேர்தல் ஆணையரான அனுப் சந்திர பாண்டே 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஓய்வுபெற்றார். அவர் ஓய்வுபெற்று 23 நாட்களாகி யும் புதிய ஆணையர் நிய மிக்கப்படவில்லை.
இந்நிலையில் மற்றொரு ஆணையரும் விலகி யுள்ளார். தற்போது தலை மைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் ஒருவர் மட்டுமே பொறுப்பிலுள்ளார். மார்ச் இரண்டாவது வாரத்தில் மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளி யாகலாம் என்று எதிர்பார்க்க ப்படும் நிலையில் ஒற்றை ஆளான ராஜீவ்குமாரால் எப்படித் தேர்தலை நடத்து வது சாத்தியம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மக்களவைத் தேர்தலை நியாயமாக, நேர்மையாக நடத்துவது குறித்து தலை மைத் தேர்தல் ஆணையம் அனைத்து மாநிலங்களுக் கும் சென்று ஆலோசனை நடத்தி வருகிறது. தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் மார்ச் 11 முதல் மார்ச் 13 வரை ஜம்மு-காஷ்மீர் செல்ல திட்டமிட்டிருந்தனர்.
மேலும் தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மார்ச் 11-ஆம் தேதி விசாரணை நடத்த உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதில் முக்கி யப் பங்காற்ற வேண்டிய நிலையில், அருண்கோய லின் ராஜினாமா பல்வேறு கேள்விகளையும், சந்தேகங் களையும் எழுப்பியுள்ளது. ‘பிரதமருக்கே அதிகாரம்’ கடந்தாண்டு டிசம்பரில் மோடி அரசால் கொண்டு வரப்பட்ட புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணை யர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பத விக்காலம்) சட்டம், 2023-இன் படியே தேர்தல் ஆணை யத்தில் தற்போது காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்; தேர்தல் ஆணையர் களைத் தேர்ந்தெடுக்கும் புதிய நடைமுறை, பிரதம ருக்கும் அனைத்து அதி காரங்களையும் வழங்கி யுள்ளது.
எனவே, பாஜக விற்கு தலையாட்டும் நபர் களால் தேர்தல் ஆணை யத்தில் காலியாக உள்ள இரண்டு இடங்களும் நிரப்பப் படுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.