india

img

சரத்பவார் படத்தை பயன்படுத்தக் கூடாது

தேசியவாத காங்  கிரஸ் தலை வர் சரத் பவா ரின் அண்ணன் மகன்  அஜித் பவார் பாஜக வின் மிரட்டலுக்கு அஞ்சி கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்தார். அதன் பிறகு கட்சியின் 41 எம்எல்ஏக்களுடன் குதிரை பேரம் மூலம் தங்கள்  பக்கம் தாவிய அஜித் பவாருக்கு மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவி வழங்கியது பாஜக. 

சிவசேனாவை ஒருதலைப்பட்சமாக ஷிண்டே தரப்புக்கு அளித்தது போல பெரும் பான்மை எம்எல்ஏக்கள் இருப்பதை காரணம் காட்டி அஜித் பவாருக்கு கட்சியின் பெயர் மற்  றும் சின்னத்தை வழங்கியது இந்திய தேர்தல் ஆணையம். கட்சியின் நிறுவனரான சரத் பவார்  தரப்புக்கு தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) என்ற புதிய பெயரை வழங்கி, சின்னமாக “கொம்பு வாத்தியம்” வழங்கப்பட்டது. 

கட்சியின் பெயர், சின்னம் (சுவர் கடிகாரம்) என  அனைத்தும் அஜித் பவார்க்கு சென்றாலும், மகா ராஷ்டிரா மக்கள் சரத் பவாரையும், அவரது கட்சி யின் பெயரான தேசியவாத காங்கிரஸையுமே (சரத் சந்திர பவார்), உண்மையான தேசியவாத  காங்கிரஸாக கருதுகின்றனர். இதனால் தற்போ தைய மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அஜித்  பவார் தரப்பு, சரத் பவார் பெயர் மற்றும் அவரது புகைப்படத்தை பயன்படுத்தி வருகிறது.

உச்சநீதிமன்றம் குட்டு
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி யின் பெயர் மற்றும் சின்னத்தை அஜித் பவார் தரப்புக்கு தேர்தல் ஆணையம் வழங்கியதை எதிர்த்து சரத் பவார் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சூர்ய காந்த், கே.வி.விஸ்வநாதன் அமர்வு முன்பு  வியாழனன்று விசாரணைக்கு வந்தது. விசார ணையின் பொழுது சரத் பவார் சார்பில் ஆஜ ராகிய மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி,  “சரத் பவாரின் படத்தை அஜித் பவார் அணி யினர் பயன்படுத்துகின்றனர்” என ஆதாரப்பூர்வ மான குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனை யடுத்து சரத் பவார் புகைப்படத்தை வைத்து பிரச்  சாரம் செய்ய அஜித் பவார் தரப்புக்கு தடை விதிப்ப தாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கோபமடைந்த நீதிபதிகள்
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு குறுக்கிட்ட  அஜித் பவார் தரப்பு சார்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங்,”எங்கள் தரப்பு  இதை வேண்டுமென்றே செய்யவில்லை. உறுப்பி னர்கள் யாரேனும் செய்திருப்பார்கள். எல்லா சமூகவலைதள போஸ்ட்களையும் கட்சி எப்படி  கட்டுப்படுத்த முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

இதை கேட்டு கோபமடைந்த நீதிபதிகள், “நீங்  கள்தான் பிரிந்து வந்துவிட்டீர்களே, அப்புறம் என்ன? உங்கள் சொந்த அடையாளங்களை கொண்டு தேர்தல்களை எதிர்கொள்ளுங்கள். கட்சி தங்கள் தொண்டர்களை கட்டாயம் கட்டுப்  படுத்த வேண்டும். சரத் பவார் பெயர், படத்தை பிரச்சாரத்துக்கு பயன்படுத்த மாட்டோம் என  திங்கள்கிழமைக்குள் உறுதிமொழி தர வேண்டும்”  என நீதிபதிகள் கறாராக கூறினர்.

சரத் பவார் பெயர் மற்றும் படத்தை பயன்படுத்  தக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவு அஜித்  பவார் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.