india

img

ஊனமுற்றோர் உரிமைகளை மீறும் டலோஜா மத்தியச் சிறைச்சாலை.... சித்ரவதையை அனுபவிக்கும் சமூகசேவகர் ஸ்டான் சுவாமி

புதுதில்லி:
மகாராஷ்டிர மாநிலம் டலோஜா மத்தியச் சிறையில், விசாரணைக்கைதியாக சிறைப்படுத்தப்பட்டி ருக்கும், 83 வயது நிரம்பிய சமூக சேவகரும், ஊனமுற்றவருமான ஸ்டான் ஸ்வாமி, உணவு அருந்துவதற்கு உறிஞ்சிக்குடிக்கும் குவளைவழங்க சிறை நிர்வாகம் மறுப்பதற்கு, ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசியமேடை கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் பொதுச் செயலாளர் முரளிதரன் சிறை நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:விசாரணைக் கைதியாக டலோஜா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஸ்டான் ஸ்வாமி அவர்கள் நடுக்குவாதம் (parkinson) நோயால் பாதிக்கப்பட்டவர். இந்த நடுக்குவாதம் என்பது ஊனத்தில் ஒரு வகை. 2016-ஆம் ஆண்டு ஊனமுற்றோர் உரிமைகளுக்கான சட்டத்தின் கீழ் வரும் ஓர் ஊனமாகும். எனவே ஊனமுற்றோருக்கு அளிக்கப்படக்கூடிய உரிமைகளை இவருக்கும் அளித்திட வேண்டும். அவர் ஊனமுற்றவர் என்று கணக்கில் எடுத்துக்கொண்டு அவர் உணவு அருந்துவதற்காக சிப்பர்ஸ் மற்றும் ஸ்ட்ரா (sipper and straw) அவருக்கு வழங்கிட வேண்டும். ஆனால், அதனை அளித்திட சிறை நிர்வாகம் மறுத்து வருகிறது. இவ்வாறு அளிக்க மறுப்பது ஊனமுற்றோர் உரிமைகளுக்கான அடிப்படைச் சட்டங்களை மீறும் செயலாகும். இந்திய அரசு, ஊனமுற்றோருக்கான சர்வதேச கன்வென் ஷன்களில் கையொப்பமிட்டிருப்பதால், இதுசர்வதேச கன்வென்ஷன்களை மீறும் செயலுமாகும்.இந்தக் கொடுமையை இனிமேலும் சகித்துக்கொள்ள முடியாது. ஸ்டான் சுவாமி மீதான வழக்கு டிசம்பர் 4 அன்றுதான், நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதுவரையிலும் ஸ்டான் ஸ்வாமியை உணவு அருந்த முடியாமல் தவிக்க விட்டுவிடக்கூடாது. எனவே ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையில் இணைந்துள்ள சங்கங்கள் அனைத்தும், டலோஜா மத்திய சிறையின் அதிகாரிக்கு, அவர் உணவு உட்கொள்வதற்கான உபகரணங்களை (sipper and straw) அனுப்பிடத் தீர்மானித்திருக்கின்றன. அவற்றை சிறை அதிகாரி ஸ்டான் ஸ்வாமியிடம் அளித்திட வேண்டும் என்றுகேட்டுக்கொள்கிறோம்.