ரூ.6,967 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வரவில்லை என ஒன்றிய இணையமைச்சர் பங்கஜ் சவுதிரி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பீகார் எம்.பி தினேஷ் சந்தர யாதவ், திரும்பப் பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுதிரி பதிலளித்துள்ளார்.
அதன்படி, நவம்பர் 1-ஆம் தேதி வரை, ரூ.3,48,891 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், இன்னும் ரூ.6,967 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது எனவும் அவர் பதிலளித்துள்ளார்.