ஆம் ஆத்மி ஒருங்கி ணைப்பாளரும், தில்லி முதல்வரு மான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 21 அன்று அமலாக்கத்துறை யால் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு செவ்வாயன்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து ஆம் ஆத்மி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கெஜ்ரி வால் சிறையில் இருப்பதை சாதகமாக பயன்படுத்தி தில்லியில் ஆம் ஆத்மியின் ஆட்சியை அகற்ற பாஜக தீவிரமாக உள்ளடி வேலை யில் இறங்கியுள்ளது. குதிரை பேரம் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பில்லாததால் கெஜ்ரி வாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்கக்கோரி ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து சேனா உள் ளிட்ட இந்துத்துவா நிர்வாகி கள் மூலம் தில்லி நீதிமன்றத் தில் அடுத்தடுத்து 2 வழக்கு களை தொடர்ந்தது பாஜக. இந்த இரண்டு வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலை யில், மூன்றாவதாக தில்லி உயர்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி முன்னாள் எம்எல்ஏ சந்தீபகுமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு புதனன்று விசாரணைக்கு வந்த நிலையில், விசாரணை யின் பொழுது உயர்நீதிமன்ற நீதிபதிகள்,”இதற்கு முன்பு ஒருமாநில முதல்வர் தண் டனை இல்லாமல் சிறைக்கு சென்றால் உச்சநீதிமன் றமோ, உயர்நீதிமன்றமோ ஒரு முதல்வரை பதவிநீக் கம் செய்துள்ளதா? பிறகு ஏன் பதவிநீக்கம் செய்யக் கோரி வழக்கு தொடர்ந்துள் ளீர்கள்?” என கேள்வி எழுப்பி மனுத்தாக்கல் செய்தவ ருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தனர்.
ஆம் ஆத்மி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் ராஜினாமா
தில்லி மற்றும் பஞ்சாப் ஆம் ஆத்மி அரசுகளை பாஜக குதிரை பேரம் மூலம் ஆட்சியைக் கவிழ்க்க தீவிர மாக இறங்கியுள்ளது என தில்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் 2 வாரங்களுக்கு முன் குற்றம் சாட்டினார். இந்நிலையில், ஆம் ஆத்மி மூத்த தலைவரும், தில்லி அமைச்சருமான ராஜ்குமார் ஆனந்த் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ராஜ்குமார் ஆனந்த் விலகினார்.