india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன், செல்  போன் செயலி மூலம் புதிய வாடிக்கை யாளர்களை சேர்க்கவும், ஆன்லைன் மூலம் புதி தாக கிரெடிட் கார்டுகளை வழங்கவும் ரிசர்வ் வங்கி  தடை விதித்துள்ளது. கடந்த 2022-2023இல் ஆன்  லைன் வங்கி சேவைக்கான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கன்னோஜில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் பத்திர திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில்,  “அடுத்த 5 ஆண்டுக்கு உண வுப்பொருள் பற்றி ஏழைகள் கவலைப்பட வேண் டாம் என கேரண்டி தருகிறேன்” என பிரதமர் அடுத்த  கேரண்டியை பறக்கவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என வயநாடு தொகுதிக்கு உட்பட்ட மலை கிராம மக்களுக்கு மாவேயிஸ்ட்டுகள் மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாம் கட்டத் தேர்தல் நெருங்கும் நிலை யில் மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில்  மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.எதிர்க்கட்சித் தொண்டர்கள், வாக்காளர் களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த புகாரில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ-வுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் இந்து - முஸ்  லிம் என இருதரப்பினரும் உரிமை கொண்டாடும் சர்ச்சைக்குரிய போஜ்ஷாலா வளா கத்தில், தங்கள் ஆய்வினை மேலும் தொடர கூடு தல் அவகாசத்தை மத்திய தொல்லியல் துறை கோரி யுள்ளது.

தெலுங்கானாவில் பிஆர்எஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான கே.சந்திர சேகர் ராவ் பேருந்து யாத்திரை மூலம் தனது 17 நாள்  தேர்தல் பிரச்சாரத்தை புதனன்று துவக்கினார்.

இந்தியாவில் அடுத்த சில தினங்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என அறிவிக்கப்பட்  டுள்ள நிலையில், தேர்தலில் வாக்குப்பதிவு சத வீதம் குறையாமல் இருக்க இந்திய தேர்தல் ஆணை யம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

புதுதில்லி
அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் மனு

மக்களவைத் தேர்தலுக்கு அஞ்சி யும், ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் ஒரு மாநில முதல்வராக  இருப்பதை விரும்பாத மோடி அரசு “இந்  தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜேஎம்எம் கட்சித் தலைவரும், ஜார்க் கண்ட் முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரனை, முதல்வராக இருந்த பொழுதே அமலாக்கத்துறை மூலம் ஜனவரி 31 அன்று கைது செய்து  சிறையில் அடைத்தது. கடந்த 3 மாதங்க ளாக ஹேமந்த் சோரன் சிறையில் உள்ள  நிலையில், அமலாக்கத்துறை கைதை  எதிர்த்து ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத் தில் ஹேமந்த் சோரன் தொடர்ந்த மனு  மீதான விவாதம் பிப்ரவரி 26 அன்றே  நிறைவடைந்தது. விவாதம் நிறைவ டைந்து 2 மாதத்திற்கு மேல் ஆகியும் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் இன்னும் எவ்வித உத்தரவும் பிறப்பிக்காமலும், தீர்ப்பு வழங்காமலும் உள்ளது. இந்நிலை யில், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தின் செயல்பாட்டை எதிர்த்து ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தகவல் வெளி யாகியுள்ளது.

புதுதில்லி
66,000 இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை

அமெரிக்காவில் 2022 ஆம் ஆண்டு  65,960 இந்தியர்கள் அமெரிக்க  குடியுரிமையை ஏற்றுக்கொண் டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மெக்சிகோவிற்கு அடுத்த படியாக அமெரிக்கக் குடியுரிமை பெற்ற  இரண்டாவது பெரிய நாடாக இது மாறி யுள்ளது.

அமெரிக்க மக்கள் தொகை கணக்கெ டுப்பு இயக்குநரகத்தின் அமெரிக்க சமூக  ஆய்வு தரவுகளின்படி, 2022 இல் அமெ ரிக்காவில் 4.6 கோடி வெளிநாட்டினர் வாழ்ந்துள்ளனர். அவர்களில் இந்தியா, மெக்சிகோ தவிர குடியுரிமை பெற்ற வர்கள் விவரம்: பிலிப்பைன்ஸ் (53,413), கியூபா (46,913), டொமினிகன் குடியரசு (34,525), வியட்நாம் (33,246) மற்றும் சீனா (27,038).