india

img

பாஜகவை கலங்கடித்த காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய்

தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர்  வேட்பாளர் நரேந்திர மோடி, உத்தரப்பிர தேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  என பாஜகவினர் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது  கூறி வந்தனர். ஆனால் வாக்கு எண்ணிக்கையின் முதல் 5 சுற்றிலேயே மோடி முன்னிலை பட்டியல்  பெயரில் இல்லாமல் கடுமையாக திணறினர். காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 5 சுற்று முடிவில்  6 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியா சத்தில் முன்னிலையில் இருந்த நிலையில், மோடி  தோற்றுவிடுவாரோ? என பாஜகவினர் திகைத்த னர். ஆனால் 6ஆவது சுற்றில் என்ன நடந்தது என்று  தெரியவில்லை. இறுதியில் மோடி 1.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் வாக்குகள் வித்தி யாசம் அறிவித்தது போல 5 லட்சம் அல்ல என்பதும்  குறிப்பிடத்தக்கது. (வாக்குகள் : மோடி - 6,12,970 (பாஜக), அஜய் ராய் - 4,60,457 (காங்கிரஸ்) - வாக்கு வித்தியாசம் : 1.52 லட்சம்)

அயோத்தியை இழந்த பாஜக

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி யில் இருந்த பாபர் மசூதியை இடித்து,  மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவிலை  கட்டி இந்த நிகழ்வை வைத்தே அரசியல் பிழைப்பு நடத்தி வருகிறது பாஜக. எதிர்க்கட்சிகள் மோடி அரசை பற்றி எதாவது விமர்சனம் செய்தால் ராமர்  மூலமாக எதையா வது கூறி பிரச்சனை யை திசைதிருப்பும் வாடிக்கையான சம்பவங்களை பாஜக தொடர்ந்து அரங் கேற்றி வந்த நிலையில், தற்போதைய மக்களவை தேர்தலில் கூட “இந்தியா” கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோவில் இடிக்கப்படும் என பிரத மர் மோடி கூறி பிரச்சாரம் மேற்கொண் டார்.

இந்நிலையில், பாஜகவின் ராமர் அர சியல் ஆதாயத்திற்கும், பிரதமர் மோடியின்  வகுப்புவாத பிரச்சாரத்திற்கும் அயோத்தி  தொகுதியையும் உள்ளடக்கிய பைசாபாத்  மக்களவைத் தொகுதி மக்கள் தங்களது பதி லடியை கொடுத்துள்ளனர். அதாவது பைசா பாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் லல்லு  சிங்கை தோல்வியடைய செய்து மக்கள் சாட்டையை சுழற்றியுள்ளனர். இரவு 7 மணி நிலவரப்படி பாஜக வேட்பாளர் லல்லு  சிங்கை எதிர்த்து போட்டியிட்ட “இந்தியா”  கூட்டணி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் (சமாஜ்வாதி)  54,567 வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றியின் விளிம்பில் இருந் தார். இதன்மூலம் தனது அரசியல் ஆதாய  பொருளான அயோத்தியை இழந்துள்ளது  பாஜக.

அமேதியில் சாதாரண தொண்டரை களமிறக்கி  ஸ்மிருதி இரானியை வீழ்த்திய காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியான அமேதியில் கடந்த 2019இல் நடை பெற்ற மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்  காந்தியை 55,102 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் ஒன்றிய அமைச்சர் பதவி யை பெற்றார் ஸ்மிருதி இரானி. 2024 மக்களவை தேர்தலிலும் ஸ்மிருதி இரானியை எதிர்த்து ராகுல் காந்தி மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்மிருதி இரானியை வீழ்த்த ராகுல் வேண்டாம் சாதாரண எங்களது தொண்டர் போதும்  என அமேதி தொகுதியில் பெரியளவு கட்சி பொறுப்புகளில் இல்லாத சாதாரண தொண்ட ரான கிஷோரி லால் சர்மாவை களமிறங்கியது காங்கிரஸ் கட்சி. இந்நிலையில், செவ்வா யன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால்  சர்மா ஒன்றிய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான ஸ்மிருதி இரானியை 1,65,926  வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றியின் விளிம்பில் உள்ளார். (மாலை 6 மணி  நிலவரம்)

;