india

img

தேர்தல் முடிந்ததும் பால் விலையை உயர்த்திய மோடி அரசு

ஒன்றிய மோடி அரசின் தேசிய பால்வள மேம் பாட்டு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது “மதர் டெய்ரி” நிறுவனம். இந் நிறுவனம் தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் முன்னணி  பால் உற்பத்தி, விநியோக  நிறுவனமாக உள்ளது. மக்க ளவை தேர்தல் முடிந்தவுடன் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 உயர்த்தப்படு வதாக  “மதர் டெய்ரி” நிறுவ னம் அறிவித்துள்ளது பொது மக்களிடையே கடும் அதிர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

“மதர் டெய்ரி” நிறுவன அறிவிப்பின்படி புல்கிரீம் பால் லிட்டருக்கு ரூ.2 அதிக ரித்து ரூ.66 ஆகவும், டோன்ட் பால் விலை லிட்டருக்கு ரூ. 51லிருந்து ரூ.53 ஆகவும் டபுள் டன் பால் லிட்டருக்கு ரூ.45 லிருந்து ரூ.47 ஆகவும் உயர்த் தப்பட்டுள்ளது. பசும்பால் மற்றும் டோக்கன் (மொத்த மாக விற்பனை செய்யப் பட்ட) பால் வகைகளின் விலை உயர்வு பற்றி அறி விப்பில் எவ்வித தகவலும் கூறப்படவில்லை. பால் பண் ணையா ளர்களிடமிருந்து மூலப் பால் கொள்முதல் விலையை உயர்த்தியதே விலை உயர்வுக்குக் காரணம் என்று மதர் டெய்ரி விளக்கம் அளித்துள்ளது. எனினும் மக்களவை தேர்தல் நேரத் தில் உயர்த்தினால் பாஜக மற்றும் மோடி அரசிற்கு சிக்கல் வரும் என்பதால், தேர்தல் முடிந்த பின்பு தங்களது விலை உயர்வு வேலையை துவங்கி யுள்ளதாக மோடி அரசின் கட்டுப் பாட்டில் உள்ள“மதர் டெய்ரி” நிறுவனத்திற்கு கண்டனங் கள் குவிந்து வருகிறது.

அமுல் பால் விலையும் உயர்ந்தது

மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள “மதர் டெய்ரி” நிறுவனத்தை போல, பாஜக ஆளும் குஜராத் மாநில அரசின் அமுல் நிறு வனமும் பாலின் விலையை லிட்ட ருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமுல் கோல்டு பால் ஒரு லிட்டர் ரூ.64 லிருந்து ரூ.66 ஆகவும்,  அமுல் சக்தி, அமுல் டீ ஸ்பெஷல் என அனைத்து அமுல் பால் வகைகளின் விலைகளும் உயர்த்தப்பட்டுள் ளன. குஜராத் கூட்டுறவு பால் விற் பனை கூட்டமைப்பின் கீழ் செயல் படும் அமுல் நிறுவனம் நாடு முழு வதும் பால் மற்றும் பால் சார்ந்த அனைத்து பொருட்களை விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.