சுதந்திரமாக செயல்படும் மத்திய அமைப்புகளான அமலாக்கத்துறை, வரு மானவரித்துறை, சிபிஐ, என்ஐஏ உள்ளிட்ட அமைப்புகள் மோடி பிர தமர் ஆன பின்பு எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் ஏவல் துறையாக மாறி விட்டது. குறிப்பாக கடந்த 17 மாதங் களாக மத்திய அமைப்புகளின் செயல்பாடு கடும் சர்ச்சையை ஏற் படுத்தி வருகிறது. காரணம் மத்தி யில் மோடி அரசை ஆட்சியில் இருந்து துரத்த 40 எதிர்க்கட்சிகள் அடங்கிய “இந்தியா” கூட்டணி யின் பிரம்மாண்ட எழுச்சி, 2024 மக்க ளவை தேர்தலில் மோடி தலை மையிலான பாஜக மீண்டும் ஆட் சிக்கு வர வாய்ப்பில்லை என்ற ஒன் றிய அரசின் உளவுத்துறை தகவ லால் பதற்றமடைந்த மோடி அரசு, அமலாக்கத்துறை, வருமானவரித் துறை, சிபிஐ மூலம் “இந்தியா” கூட் டணி கட்சித் தலைவர்களை ஒடுக் கும் முனைப்பில் கைது, சம்மன் மூலம் அராஜக நடவடிக்கை மேற் கொண்டு வருகிறது. தற்போது தேர் தல் சீசன் என்றாலும் மத்திய அமைப்புகள் எதிர்க்கட்சியினர் மீதான அடக்கு முறையை தொட ர்ந்து அரங்கேற்றி வருகின்றன.
இந்நிலையில், தில்லியில் உள்ள மாநில காவல்துறை தலைமை அலுவலகம் எதிரில் உள்ள வரு மானவரித்துறை அலுவலகத்தின் 4ஆவது மாடியில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் 21 தீயணைப்பு வாக னங்களுடன் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந் துள்ளனர். லேசாக தீ பரவிய பொழுதே நல்வாய்ப்பாக சில ஊழி யர்கள் முன்கூட்டியே வெளியேறிய தால் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. எனினும் தாமதமாக வெளியேறிய அலுவலக ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த தீவிபத்தில் முக்கிய கோப்புகள் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தில்லி போலீசார் தகவல் தெரிவித்துள்ள னர்.
வலுக்கும் சந்தேகம்
ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 16 அன்று பிரதமர் மோடிக்கு நெருக்க மான நண்பரும், ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவின் அமைச்சக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத் தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகியதாக ஒன்றிய அரசு மற்றும் தில்லி காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். ஆனால் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை விளக்கம் அளிக்க வில்லை. தோல்வி பயத்தால் முக் கிய மற்றும் முறைகேடான ஆவ ணங்களை மோடி அரசு கொளுத்தி இருக்கலாம் என தக வல்கள் தெரிவித்தன. இந்நிலை யில், அந்த சம்பவத்தை போலவே வருமான வரித்துறை ஆவணங் களை எரிக்கவே தீவிபத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.