india

img

கோவாக்ஸின் தடுப்பூசி ஆய்வறிக்கை பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு ஐசிஎம்ஆர் கண்டனம்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு “கோவிஷீல்டு” கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு ரத்த உறைதல் உள்ளிட்ட பக்க விளைவு ஏற்படலாம் என்று தடுப்பூசி யை தயாரித்த ஆஸ்ட்ராஜெனிகா நிறு வனமே கூறியது. ஆஸ்ட்ராஜெனிகா வின் இந்த அறிக்கை மக்கள் மத்தி யில் ஏற்படுத்திய அதிர்ச்சியே இன்னும்  அடங்கவில்லை. இந்நிலையில், “கோவாக்ஸின் தடுப்பூசி போட்டவர் களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட லாம்” என பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் ஒரு ஆய்வை கடந்த வாரம் வெளியிட்டது. இந்த அறிக்கைக்கு கோவாக்ஸின் தடுப்பூசியை தயா ரித்த பாரத் பயோடெக் நிறுவனம் இது வரை எவ்வித பதிலும் மறுப்பும் தெரி விக்காத நிலையில், கொரோனா தடுப்  பூசி தொடர்பாக பக்கவிளைவு ஆய்வ றிக்கை நாட்டு மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், பனாரஸ் இந்து பல்  கலைக்கழகத்தின் கோவாக்ஸின் தடுப்  பூசி ஆய்வறிக்கைக்கு ஐசிஎம்ஆர்  (இந்திய மருத்துவ ஆய்வு கழகம்)  கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கோவாக்ஸின் தடுப்  பூசி குறித்த பனாரஸ் இந்து பல்கலைக்  கழகத்தின் சமீபத்திய ஆய்விற்கு தங்க ளிடம் ஒப்புதல் எதுவும் பெறவில்லை. தடுப்பூசி ஆய்வு மோசமாக வடிவ மைக்கப்பட்டுள்ளது. மேலும் சீரற்ற  ஆய்வு முறைகள் பயன்படுத்தப்பட் டுள்ளது. அதனால் ஆய்வு முடிவை திரும்பப் பெற வேண்டும். ஆய்வு முடிவுகளில் தங்கள் பெயரை நீக்க வேண்டும். அவ்வாறு திரும்பப் பெறப்  படாவிட்டால், சட்டரீதியாக மற்றும் நிர்வாகரீதியாக நடவடிக்கை எடுக்கப்  படும் என பனாரஸ் இந்து பல்கலைக்  கழகத்துக்கு ஐசிஎம்ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் கோவாக் ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வர்களில் சுமார் 30 சதவீத பேருக்கு கடு மையான பக்கவிளைவுகள் ஏற்பட்ட தாக வெளியான அறிக்கை முற்றிலும்  தவறானது” என்றும் கூறியுள்ளது.