india

img

மக்கள் அனைவரும் பாகிஸ்தானியர்களா? அமித் ஷாவிற்கு கெஜ்ரிவால் சாட்டையடி கேள்வி

18ஆவது மக்களவை தேர்தலில் “இந்  தியா” கூட்டணி ஆட்சியை கைப்பற்  றும் என பல்வேறு கருத்துக்கணிப்பு கள் வெளியாகி வரும் நிலையில், தோல்வி  பயத்தால் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜகவினர் கண்டதை உளறி வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக வினரின் வெறுப்புப் பிரச்சாரத்தை பொது மக்கள் கண்டுகொள்ளாத நிலையில், மே 20 அன்று தில்லி சங்கம் விஹாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா,”ராகுல் காந்தி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இந்தியாவை விட பாகிஸ்தானில் அதிக ஆதரவு உள்ளது” என சர்ச்சைக்குரிய வகையில் கூறினார்.

இந்நிலையில், இந்த கருத்திற்கு தில்லி  முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பா ளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடியுடன் கேள்வி எழுப்பியுள்ளார். அதில்,”ஆம் ஆத்மி  ஆதரவாளர்கள் அனைவரும் பாகிஸ்தானி யர்கள் என்று அமித்ஷா கூறுகிறார். 62  இடங்கள் மற்றும் 56 சதவிகித வாக்குகளு டன் ஆம் ஆத்மியை தேர்வு செய்த தில்லி மக்கள், 117 சட்டமன்ற தொகுதிகளில் 92 தொகுதிகளை ஆம் ஆத்மிக்கு வழங்கிய பஞ்சாப் மக்கள், ஆம் ஆத்மி மீது மிகுந்த அன்பு வைத்துள்ள குஜராத், கோவா, உத்த ரப்பிரதேசம், அசாம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த  மக்கள் அனைவரும் பாகிஸ்தானியர்களா? அமித் ஷா நாட்டு மக்களை அவமதித்துவிட் டார். ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு முடிவ டைந்துள்ள நிலையில், ஜூன் 4 அன்று மோடி  அரசு வீழ்ந்து, மத்தியில் “இந்தியா”  கூட்டணி  ஆட்சியை கைப்பற்றும். “இந்தியா” கூட்ட ணிக்கு 300 இடங்களுக்கு மேல் கிடைக்கும்” என அவர் கூறினார்.

காற்று வாங்கிய அமித் ஷா பிரச்சாரக் கூட்டம்

மே 20 அன்று தில்லி சங்கம் விஹாரில் பாஜக வேட்பா ளர்களுக்கு ஆதரவாக அமித் ஷா பிரச்சாரம் மேற்  கொண்டார். இந்த பிரச்சாரக் கூட்டத்திற்கு பிரம்மாண்ட மேடை, மலர் உள்ளிட்ட செலவுகள் செய்யப்பட்டு, ஆயி ரத்திற்கும் அதிகமான இருக்கைகள் (சேர்) போடப்பட்டு இருந்தன. ஆனால் அமித் ஷா பிரச்சாரக் கூட்டத்திற்கு 500க்கும் குறைவானவர்களே இருந்தனர். அதில்  200க்கும்  மேற்பட்டோர் அமித் ஷாவை காரில் பின் தொடர்ந்து வந்த  வெளியாட்கள் ஆவர். இதனால் அதிருப்தி அடைந்த அமித்  ஷா பாகிஸ்தான் பற்றி பேசி விரைவிலேயே பிரச்சாரக் கூட்டத்தை முடித்து ஓட்டம் பிடித்தார். காற்று வாங்கிய அமித் ஷா பிரச்சாரக் கூட்டத்தின் மூலம் தில்லி மக்கள் பாஜகவை புறக்கணித்துள்ளது தெளிவாக தெரிகிறது.

;