india

img

ராகுல் யாத்திரையில் கெஜ்ரிவால்

காங்கிரஸ் மூத்த தலைவ ரும், எம்பியுமான ராகுல் காந்தியின் கிழக்கு இரண்  டாம் கட்ட யாத்திரையான “இந்திய ஒற்று மைக்கான நீதி யாத்திரை” வியாழ னன்று குஜராத்தில் நுழைகிறது. குஜ ராத் மாநிலத்தில் உள்ள 7 மாவட்  டங்கள் வழியாக 14 மக்களவைத் தொகுதி களுக்கு இந்த யாத்திரை செல்ல  உள்ள நிலையில், ராகுல் யாத்திரையில்  பங்கேற்க வேண்டும் என “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம்  ஆத்மி கட்சியின் நிறுவனரும், தில்லி  முதல்வருமான அரவிந்த் கெஜ்ரி வாலுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு  விடுத்துள்ளது. இந்நிலையில், கெஜ்ரிவால் யாத்திரையில் பங்  கேற்க உள்ளதாக ஆம் ஆத்மி அறி வித்துள்ளதாக தகவல் வெளியாகியுள் ளது. வரவிருக்கும் மக்களவை தேர்த லில் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து களமிறங்  குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.