india

img

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு

இந்திய விளையாட்டு ஆணையத்தில் உள்ள காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதன் விவரம்
பணி
: மசாஜ் தெரபிஸ்ட் (Massage Therapist) 
காலியிடங்கள்: 104
சம்பளம்: மாதம் ரூ.35,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மசாஜ் தெரபிஸ்ட் பயிற்சியில் சான்றிதழ் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
தேர்வு செய்யப்படுவர் விவரம் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.incpe.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் வரும் 6 ஆம் தேதிக்குள் massagetherapist@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

;