india

img

மீண்டும் சிவக்கிறது ஜாதவ்பூர் இளைஞர்களின் குரலாய் ஒலிக்கும் ஸ்ரீஜன்

மேற்குவங்கத்தின் ஜாதவ்பூரில் மக்களவை தேர்தல் நடைபெறு கிறது என்று கூறுவதை விட,  இளைஞர்களின் குரலை மக்களவையில் ஒலிக்க வைப்பதற்கான போராட்டம் நடை பெற்று வருகிறது என்று தான் கூற வேண்  டும். காரணம் ஜாதவ்பூர் மக்களவை தொகுதியின் “இந்தியா” கூட்டணி வேட்  பாளராக இளைஞரை களமிறக்கியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஸ்ரீஜன் பட்டாச்சார்யா என்ற பெயருடைய அந்த இளைஞர் இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளரும், சிபிஎம் மேற்கு வங்க மாநிலக்குழு உறுப்பினர் பதவியில் உள்ள துடிப்புமிக்க இடது சாரி ஆவார். ஜாதவ்பூர் பல்கலைக்கழ கத்திலேயே பட்டம் பெற்ற ஸ்ரீஜன் பட்  டாச்சார்யாவுக்கு ஆதரவாக சிபிஎம், காங்கிரஸ் ஊழியர்கள், பொதுமக்கள் மட்டுமின்றி, மாணவர்களும் பெருந்திர ளாக பங்கேற்று பிரச்சாரம் மேற்கொண்  டனர். இளைஞர்கள் மத்தியில் பேராத ரவு உள்ள ஸ்ரீஜன் பட்டாச்சார்யா கண் டிப்பாக ஜாதவ்பூரில் வெற்றி பெறுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கோட்டையை கைப்பற்ற  சிபிஎம் தீவிரம்

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தா வின் தெற்குப் பகுதியான ஜாதவ்பூர் இடது சாரிகளின் வலுவான கோட்டையாக இருந்தது. இங்குள்ள மக்களில் பெரும் பாலானோர் கிழக்கு வங்காளத்தில் இருந்து அகதிகளாக இடம்பெயர்ந்து வந்தவர்களாவர். 1984இல் வீசிய இந்திரா  அனுதாப அலையின் போது முதன்முறை யாக இத்தொகுதியை சிபிஎம் இழந்தா லும், 1989 முதல் 2009 வரை 20 ஆண்டு கள் மீண்டும் சிபிஎம்மின் வலுவான கோட்  டையாக மாறியது. எனினும் 2014இல் தோல்வி கண்ட சிபிஎம், தற்போதைய தேர்தலில் தொகுதியை திரும்பப் பெற்று,  ஜாதவ்பூரின் கம்யூனிஸ்ட் பாரம்பரி யத்தை நிலைநிறுத்துவதற்கான வலு வான விருப்பம் தொகுதி முழுவதும் காணப்படுகிறது.

சிபிஎம் வேட்பாளர் ஸ்ரீஜன் பட்டாச் சார்யாவை எதிர்த்து திரிணாமுல் காங்கி ரஸ் சார்பில் நடிகை சைனி கோஷும், பாஜக வேட்பாளராக அனிர்பன் பத்யோ பாத்யாயா போட்டியிடுகிறார். மும்முனை  போட்டி என்று கூறப்பட்டாலும், சிபிஎம் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே மட்டுமே போட்டி நிலவுகிறது. 2019இல் இடது முன்னணி இங்கு மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில், ஜாதவ்பூர் தொகுதி மக்களுடன் நெருங்கிய உற வைக் கொண்ட ஸ்ரீஜன் மூலம் தொகுதியை  மீண்டும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை யுடன் சிபிஎம் களமிறங்கியுள்ளது.
 

;