india

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

தமது தலைமையின் கீழ் நாடு மிகப்பெரும் பொருளாதார வளர்ச்சியை எட்டிவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி இடைவிடாமல் ஒரே பல்லவியை பாடி வருகிறார். முற்றிலும் திரிக்கப்பட்ட புள்ளி விபரங்களை அவரும், அவரது ஊதுகுழல்களும் பரப்பி வருகிறார்கள். ஆனால் ‘மோடினாமிக்ஸ்’ எனப்படும் பேரழிவு மிக்க மோடி அரசின் பொருளாதார கொள்கைகளின் விளைவாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மிகவும் துயரம் தரத்தக்கவை.  

வேலையின்மை விகிதம் 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 39.8சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. வேலையில் இருப்பவர்களின் விகிதம் 36.7சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்த நிலையை விட தற்போது மோசமடைந்துள்ளது.