india

img

ஈரான் புதிய ஜனாதிபதியாக மசூத் பெசெஷ்கியான் தேர்வு

புதுதில்லி, ஜூலை 6- ஈரான் ஜனாதிபதி யாக இருந்த இப்ரா ஹிம் ரைசி, கடந்த மே 19 அன்று மலைப்பகுதி யில் நிகழ்ந்த ஹெலி காப்டா் விபத்தில் உயி ரிழந்தார்.

இதையடுத்து, புதிய  ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த வாரம் (ஜூன் 28) நடை பெற்றது. இதில், சுயேச்சையாகப் போட்டி யிட்ட மசூத் பெசெஷ்கியனுக்கு 1.04 கோடி  வாக்குகள் (44.40 சதவிகிதம்) கிடைத்தன.  சுயேச்சையாகப் போட்டியிட்ட மற்றொரு  வேட்பாளரான சயீது ஜலீலுக்கு 94 லட்சம்  வாக்குகள் (40.38 சதவிகிதம்) கிடைத்தன.

இந்த நிலையில், முதல் இரு இடங்க ளைப் பெற்றவா்களுக்கு இடையே 2-ஆவது  மற்றும் இறுதிக்கட்ட தோ்தல் வெள்ளியன்று  நடத்தப்பட்டது. 

இதில், சீா்திருத்தவாதியாக கருதப்படும் மசூத் பெசெஷ்கியான், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தீவிர மத நிலைப்பாட்டைக் கொண்ட சயீது ஜலீலை விட அதிக (மொத்  தம் 1 கோடியே 63 லட்சத்திற்கும் அதிகமான) வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக  ஈரான் தேர்தல் ஆணையம் சனிக்கிழமை யன்று அறிவித்தது.

1954ஆம் ஆண்டு செப்டம்பரில் பிறந்த பெசெஷ்கியன், பல்கலைக்கழகத் தலைவர், சுகாதார அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பி னர், நாடாளுமன்றத்தின் முதல் துணைத் தலைவர், சுகாதார அமைச்சர் ஆகிய பதவி களை அவர் வகித்தவர் ஆவார்.