india

8.2 சதவிகிதமாக இருந்த ஜிடிபி 6.7 சதவிகிதமாக சரிந்தது நாட்டின் வளர்ச்சியில் மேலும் பலத்த அடி!

புதுதில்லி, ஆக. 30 - நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 சத விகிதமாக குறைந்துள்ளது.

இது கடந்த நிதியாண்டில் 8.2 சதவிகிதமாக இருந்த நிலையில் தற்போது பலத்த அடி வாங்கியுள்ளது. 

தேசிய புள்ளிவிவர அலு வலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. 

குறிப்பாக, விவசாயத் துறை மோசமான செயல்திறனைப் பதிவு செய்துள்ளது.

2023 - 24 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் காலா ண்டில் 3.7 சதவிகிதமாக இருந்த விவசாயத் துறை, தற்போது 2 சதவிகித வளர்ச்சியையே பதிவு செய்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி மட்டும் 5 சத விகிதத்திலிருந்து 7 சதவிகி தமாக அதிகரித்துள்ளது.

நிதி, ரியல் எஸ்டேட், தொழில்முறை சேவை களின் சேர்க்கப்பட்ட மொத்த மதிப்பின் விரிவாக்கம் கடந்தாண்டின் காலாண்டில் 12.6 சதவிகிதமாக இருந் தது. இது தற்போது 7.1  சதவிகிதமாகக் குறைந்துள் ளது.

2024 - 25 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிலை யான விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 43.64 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது; இது 2023 - 24 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 40.91 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

இதன்மூலம், 6.7 சதவிகித வளர்ச்சி விகிதமே பதிவாகியுள்ளது.

மின்சாரம், எரிவாயு, குடி நீர் வழங்கல், பிற பயன்பாட்டு சேவைகள் 3.2 சதவிகிதத்திலிருந்து 10.4 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கட்டுமானப் பிரிவு ஒரு வரு டத்திற்கு முன்பு 8.6 சத விகிதத்திலிருந்து 10.5 சதவிகிதம் வளர்ச்சி யடைந்துள்ளது.

அதேநேரம், வர்த்த கம், ஹோட்டல்கள், போக்கு வரத்து, தகவல் தொடர்பு,  ஒளிபரப்பு தொடர்பான சேவைகள் ஒரு வரு டத்திற்கு முன்பு 9.7 சதவிகி தத்திலிருந்து 5.7 சதவிகித மாகக் குறைந்துள்ளது.