india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பாஜக ஆளும் வன்முறை பூமியான மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் மேற்கு  மாவட்டம் நவுரெம்தாங் பகுதியில் ஜார்க்கண்ட் மாநி லத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் ஹங்சாதா (41) என்ற  கூலித் தொழிலாளியை மர்ம நபர்கள் துப்பாக்கி யால் சுட்டுக் கொன்றனர். இதனால் மணிப்பூரில் உச்சகட்ட பதற்ற நிலை உருவாகியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி 2014-2022 வரை ரூ.7.08 கோடி வெளிநாட்டு நிதி பெற்றுள்ளதாகவும், அக்கட்சி அந்நிய செலாவணி விதிகளை மீறிய தாக அமலாக்கத்துறை அடுத்தடுத்த புகாரை முன் வைத்துள்ளது.

இந்தியாவின் தண்டனைச் சட்டங்களை மாற்றி யமைக்க 3 புதிய சட்டங்கள் இயற்றப்பட் டதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் திங்களன்று தள்ளுபடி செய்தது. 

உத்தரப்பிரதேசத்தின் எட்டாவில் 8 முறை வாக்களித்த இளைஞர் ஞாயிறன்று கைது  செய்யப்பட்ட நிலையில், அவர் வாக்களித்த  வாக்குச் சாவடிக்கு மறுதேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலம் ஜார்கிராம் தொகுதி  எம்பி குனார் ஹெம்ப்ராம் பாஜகவிலி ருந்து விலகி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

ராய்பூர்
சத்தீஸ்கரில் கோர விபத்து
வேன் கவிழ்ந்து 
18 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா அருகே பைகா பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 25 பேர் கொண்ட குழு, பாரம்பரிய டெண்டு இலைகளை சேக ரித்துவிட்டு வேனில் வீடு திரும்பிக் கொண்  டிருந்தது. அப்போது, திடீரென கட்டுப்  பாட்டை இழந்த வாகனம் பஹ்பானி பகு திக்கு அருகே 20 அடி ஆழமுள்ள பள் ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி, 18 பேர் சம்பவ  இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த னர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  விரைந்த மீட்பு படையினர் காயமடைந்த வர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுப்பி வைத்தனர். சிலரது நிலைமை மோசமாக இருப்பதால், பலி  எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படு கிறது.

அகமதாபாத்
குஜராத்தில் 
4 ‘தீவிரவாதிகள்’ கைது

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்  தின் தலைநகர் அகமதாபாத்  தின் சர்வதேச விமான நிலை யத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த  4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள தாக செய்தி வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரி யவந்துள்ள நிலையில், அவர்களின் புகைப்படத்தை தீவிரவாத தடுப்பு பிரி வினர் வெளியிட்டு ரகசிய இடத்தில் விசா ரணை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகள் கைது  செய்யப்பட்டதைத் தொடர்ந்து அகமதா பாத் விமான நிலையத்தில் பலத்த பாது காப்பு போடப்பட்டுள்ளது.

ஆக்ரா
உத்தரப்பிரதேசத்தில் பணம் பட்டுவாடா?
ஷூ வியாபாரி வீட்டில்
ரூ.40 கோடி பறிமுதல்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக மக்க ளவைத் தேர்தல் நடைபெற்று  வரும் நிலையில், தோல்வி பயத்தால் மாநி லம் முழுவதும் பாஜகவினர் பணம் பட்டு வாடா செய்து வருவதாக அடிக்கடி தக வல் வெளியாகி வருகிறது. 

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநி லத்தின் முக்கிய நகரான ஆக்ராவில் காலணி (ஷூ) விற்கும் வியாபாரி அதிக  அளவிலான பணத்தை கையாளுவதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய புகார் கிடைத்தது. இதையடுத்து, காலணி (ஷூ) வியாபாரி மற்றும் அவருடன் தொடர்புடைய நிறுவனங்களில் சந்தே கத்தின் பேரில் வருமான வரித்துறையினர்  2 நாட்களுக்கு முன் சோதனை நடத்தினர்.  பல மணிநேரமாக நடைபெற்ற இந்த சோத னையில் ரூ.40 கோடி அளவிலான பணம் கைப்பற்றப்பட்டது. ஆனால் பணம் முழு வதுமாக எண்ணப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ள நிலையில், ஷூ விற்கும்  வியாபாரி வீட்டில் ரூ.40 கோடி வந்தது எப்படி? இது யாருடைய பணம்? என்பது தொடர்பான விவகாரம் இதுவரை வெளி யாகாமல் உள்ளது. பாஜகவிற்கு சொந்த மான பணம் என்பதால் இந்த விவகா ரத்தில் வருமான வரித்துறை மந்தமாகச் செயல்பட்டு வருகிறதோ? என்ற சந்தேக மும் கிளம்பியுள்ளது.