india

img

'இஸ்லாமியர்' என்ற வார்த்தைக்கு தூர்தர்ஷன் தடை! - யெச்சூரி குற்றச்சாட்டு

'இஸ்லாமியர்' என்ற வார்த்தையை சொல்ல தூர்தர்ஷன் தொலைக்காட்சி தடை விதித்தாக சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வரும் இந்த சூழலில், ஒன்றிய அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மற்றும் அகில இந்திய வானொலி நிலையத்தில் (All India Radio) நிகழ்த்தப்பட்ட தேர்தல் பிரச்சார உரையின் போது, 'இஸ்லாமியர்', 'வகுப்புவாத கட்சி', 'சர்வாதிகார ஆட்சி' போன்ற வார்த்தைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதாக சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
'இஸ்லாமியர்' என்பதற்குப் பதிலாக 'மாற்று மதத்தினர்' என வார்த்தை பயன்படுத்த வற்புறுத்தியதாகவும், இது குறித்து கேள்வி எழுப்பியபோது, தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவதால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

;