india

உணவை வைத்தும் இழிவான பிரச்சாரம் தமிழர்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் பாஜக வலுக்கும் கண்டனம்

பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை  அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர்  தமிழ்நாட்டிற்கு வருகை தந்தால் பள்ளிக் குழந்தைகள் போல முகத்தை வைத்துக்கொண்டும், வெட்டி, சட்டை அணிந்து கொண்டும் திண்ணைப்படிப்பு முதல் திருக்குறள் வரை பற்றி புகழ்ந்து பேசியும் செல்வார்கள். பிரச்சாரத்திற்கு வந்  தால் தமிழர்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்து செல்வது போல உயர்த்தி பேசு வார்கள். பாஜகவின் பசப்பு பிரச்சாரம் அனைத் தும் தமிழர்களுக்கு நன்கு தெரியும்.

தமிழ்நாட்டை தாண்டி வேறு மாநி லத்திற்கு சென்றால் தமிழர்களை வைத்து  இழிவாக பிரச்சாரம் செய்வதையே பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்  ஷா உள்ளிட்ட பாஜகவினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். மக்களவை தேர்தல் பிரச்  சாரத்தின் பொழுது, ஒடிசாவில் ஆளுங்கட்சி யாக உள்ள பிஜு ஜனதா தளத்தின் தலை வரும், முதல்வருமான நவீன் பட்நாயக்கின்  தனிச் செயலாளரான வி.கே.பாண்டியனை  (தமிழ்நாட்டைச் சேந்தவர்) குறிவைத்து, “தமிழர்களை திருடர்கள் என்றும், ஒடி ஷாவை ஒரு தமிழர் ஆளலாமா?” என்றெல்  லாம் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா உள்  ளிட்டோர் இழிவாக பேசினார்கள். இதற்கு கடும் கண்டனங்கள் குவிந்தது.

இந்நிலையில், ஒடிஷா மாநிலத்தின் கடைசிக் கட்ட மக்களவை மற்றும் சட்டமன்ற  தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒடிசா பாஜக டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தென்  னிந்திய கலாச்சார உடையான வேட்டி - சட்டை  அணிந்து நபர் ஒருவர் உணவகத்திற்கு செல்கிறார். அங்கே அவருக்கு பழைய சாதம் (கஞ்சி) கொடுக்கப்படுகிறது. அதனை அவர் பாத்திரத்தில் சாப்பிடாமல் உணவக ஊழியரிடம் சண்டையிட்டு, இலை யில் போட்டு சாப்பிடுகிறார். அப்போது அந்த  சாதம் மற்றும் தண்ணீர் வடிகிறது. மேலும் உணவக ஊழியர் சப்பாத்தி எடுத்து வரும்போது தோசையா என்று கேட்கிறார்.

இந்த வீடியோ உணர்த்துவது யாதெ னில் தமிழர்கள் ஒரு பழைய சாதத்தை  போன்றவர்கள். தமிழர்கள் தோசைக்கும், சப்பாத்திக்கும் உள்ள வேறுபாடு கூட தெரி யாதவர்கள். அதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியன் இடம்பெற் றுள்ள பிஜேடி கட்சிக்கு வாக்களிக்காமல் பாஜகவிற்கு வாக்களியுங்கள் என்ற முறை யில் வீடியோ பிரச்சாரம் மேற்கொண்டுள்ள னர். தமிழர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்திய உணவுக் கலாச்சாரத்தையே பாஜக அவமானப்படுத்தியுள்ளது. 

;