india

img

சிஏஏ சட்டத்தின் கீழ் 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கிய மோடி அரசு

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளி லிருந்து இந்தியாவில் குடி யேறிய முஸ்லிம் அல்லாத மற்ற மதப்பிரிவி னருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழி வகை செய்யும், குடியுரிமை சட்டத் திருத்தச் சட்டம் (சிஏஏ) கடந்த 2019 டிசம்பரில் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தொ டர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்ட நிலையில், சிஏஏ சட்டத்தின் படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசம் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31 அன்றுக்குள் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர் கள், பெளத்தர்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர் கள் ஆகியோருக்கு எவ்வித ஆவணங்க ளும் இல்லாவிட்டாலும் இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முஸ்லிம் மக்களை நாட்டை விட்டு துரத்தும் நோக்கத்தில் சிஏஏ சட்டம் அமல்படுத்தப் பட்டதாக நாடு முழுவதும் போராட்டம் வெடித் தது. ஆனால் மோடி அரசு வன்முறை மூலம் 2020இல் சிஏஏ போராட்டத்தை ஒடுக்கியது.  

தோல்வி பயத்தால் அமல்
அதன்பிறகு 4 ஆண்டுகளாக சிஏஏ சட்டம் பற்றி வாய் திறக்காமல் அமைதியாக இருந்த மோடி அரசு மக்களவை தேர்தலின் தோல்வி பயத்தால் கடந்த மார்ச் மாதம் 11 அன்று சிஏஏ சட்டம் அமலுக்கு வருவதாக கூறி, சட்டத்துக்கான விதிகளையும் மோடி அரசு வெளியிட்டது. 

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேரு க்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப் பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்ச கம் அறிவித்துள்ளது. அதில்,இதுகுறித்து  மேலும் கூறுகையில்,”சிஏஏ அமலுக்கு பிறகு முதல் குடியுரிமைச் சான்றிதழ்கள் செவ்வாயன்று வழங்கப்பட்டன.  14 பேருக்கு குடியுரிமை சான்றிதழை வழங்கி, அவர்க ளுக்கு ஒன்றிய உள்துறைச் செயலர் ஸ்ரீ அஜய் குமார் பல்லா வாழ்த்து தெரி வித்தார்” எனக் கூறப்பட்டுள்ளது.

;