india

img

பாஜக எம்.பி.யின் பரிந்துரைக் கடிதத்துடன் நுழைந்தவர்கள்

புதுதில்லி, டிச.13- நாடாளுமன்ற மக்களவையின் பார்வை யாளர் மாடத்தில் இருந்த இரண்டு இளை ஞர்கள் திடீரென அவைக்குள் குதித்து வண் ணங்களை கக்கும் புகைக்குண்டுகளை வீசி,  ‘சர்வாதிகாரம் ஒழிக!’ என கோஷம் எழுப்பிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு இளைஞர்கள் நாடாளுமன்றத் திற்குள் புகைக்குண்டுகளை வீசிய அதே நேரத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியே யும் இளம்பெண்கள் இருவர் வண்ணங்க ளைக் கக்கும் புகைக்குண்டுகளை வீசி, ‘சர் வாதிகாரத்தை நிறுத்து... அடக்குமுறையை நிறுத்து.. பாரத் மாதாகி ஜே; வந்தே மாத ரம்!’ என்று கோஷமிட்டுள்ளனர்.

நான்கு கட்ட பாதுகாப்பு சோதனைகளைக்  கொண்ட நாடாளுமன்றத்திற்குள், குண்டுகளு டன் இளைஞர்கள் நுழைந்ததும், அவர்கள், அவை நடந்துகொண்டிருக்கும்போதே பார்வையாளர் மாடத்திலிருந்து குதித்து புகைக்குண்டுகளை வீசியிருப்பதும்- 22 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய அதே டிசம்பர் 13-ஆம் தேதியை தேர்வுசெய்து- தாக்கு தல் நடத்தியிருப்பதும் பெரும் களேபரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு கட்ட பாதுகாப்பு சோதனைகளைக்  கொண்ட நாடாளுமன்றத்திற்குள், குண்டுகளு டன் இளைஞர்கள் நுழைந்ததும், அவர்கள், அவை நடந்துகொண்டிருக்கும்போதே பார்வையாளர் மாடத்திலிருந்து குதித்து புகைக்குண்டுகளை வீசியிருப்பதும்- 22 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய அதே டிசம்பர் 13-ஆம் தேதியை தேர்வுசெய்து- தாக்கு தல் நடத்தியிருப்பதும் பெரும் களேபரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக எம்.பி. அளித்த கடிதம்
நாடாளுமன்றத்தில் மக்களவைக்குள் பார்வையாளராகச் செல்வதற்கு எம்.பி.யின்  பரிந்துரைக் கடிதம் மிக முக்கியத்துவம் வாய்ந்  தது. இந்த கடிதத்தின் அடிப்படையிலேயேநுழைவுச் சீட்டு வழங்கப்படும். அந்த அடிப்படையில், புகைக் குண்டு வீசிய 2 இளைஞர்களுக்கும், கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா-தான் பரிந்துரைக் கடிதம் வழங்கியிருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. களேபரத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் காலணிக்குள் புகைக்குண்டுகளை மறைத்து எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், விசாரணையில் “நாங்கள் எந்த அமைப்பையும் சார்ந்தவர்கள் அல்ல. நாங்கள் நடத்துவது, வேலையின்மை, விலைவாசி உயர்வு மற்றும் அடக்குமுறைக்கு எதிரான போராட்டம். மணிப்பூருக்கு ஆதரவாக எழுந்த போராட்டம். பாரத் மாதாகி ஜே; வந்தே மாதரம்” எனத் தெரிவித்ததாக தக வல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் குறித்து தில்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா, உள்துறை செயலாளர் அஜய் பல்லா, சிஆர்பிஎப் தலை வர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நாடாளு மன்றத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே, நாடாளுமன்றத்தில் நடந்துள்ள அத்துமீற லுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், பாஜக ஆட்சியின் பாதுகாப்புக் குறைபாட்டையே புகைக் குண்டு வீச்சு சம்பவம் காட்டுவதாக குற்றச்சாட்டையும் முன் வைத்துள்ளனர். இதற்கு முன்பு, 2001-ஆம் ஆண்டும் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியின்போதுதான் நாடாளுமன்றத் தில் பயங்கரவாதிகள் புகுந்து, 9 உயிர்களைப் பறித்தனர் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், புகைக் குண்டு வீசியவர்களுக்கு பாஜக எம்.பி.தான் பரிந்துரைக் கடிதம் வழங்கியிருக்கிறார் என்பதால், விரிவான நியாய மான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளனர்.