புதுதில்லி, மே 15- மக்களவைத் தேர்தல் நிறைவடைய இன்னும் மூன்று கட்டங்களே உள்ள நிலையில், பாஜக, கடும் சவாலை சந்தித்து வருகிறது. அடுத்த மூன்று கட்டங்களாக 163 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கடந்த தேர்தலில் இந்த 163 இடங்களில் 118 இடங்களை பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப் பற்றின. எதிர்க்கட்சிகள் 45 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இருப்பினும், கடந்த தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியை இம்முறை பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது.
உ.பி.யில் 41 இடங்களுக்கும், பீகாரில் 21 இடங்களுக்கும், மே.வங்காளத்தில் 24 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் மீதமுள்ள 13 தொகுதிகளில் 20 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஒடிசாவில் மீதமுள்ள 17 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 10 தொகுதிகளுக்கும், தில்லியில் 7 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும் வருகிற 25 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. பஞ்சாபில் 13 இடங்களிலும், இமாச்சலத்தில் 4 இடங்களிலும், சண்டிகரில் 4 இடங்களி லும் ஜூன் 1ஆம் தேதி இறுதிக்கட்ட மாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மகாராஷ்டிராவில் மீதமுள்ள 13 இடங்களில் முன்பு என்டிஏ வெற்றி பெற்றது. இருப்பினும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்) மற்றும் என்சிபி (சரத் பவார்) அடங்கிய இந்தியா கூட்டணி, மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேசிய ஜன நாயகக் கூட்டணிக்கு கடும் சவாலாக உள்ளது. பால்கர் உள்ளிட்ட தொகுதி களில் இந்தியா கூட்டணி வேட்பாளர் களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அளிக்கும் ஆதரவு முக்கியமானதாக இருக்கும்.
கடந்த தேர்தலில் பீகார், தில்லி, அரி யானா மற்றும் ஹிமாச்சல் மாநிலங் களின் மீதமுள்ள தொகுதிகளில் பாஜக முழுமையான வெற்றியைப்பெற்றது, அங்குள்ள வாக்காளர்கள் இறுதிக் கட்டத்தில் வாக்குச் சாவடிகளுக்குச் செல்கின்றன. ஆனால், கெஜ்ரிவால் விடுதலையைத் தொடர்ந்து அரியானா மற்றும் தில்லியில் பாஜகவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பீகாரிலும் இந்தியா கூட்டணி பாஜவுக்கு கடும் சவாலாக உள்ளது. உ.பி-யில்மீதமுள்ள 41 தொகுதிகளில், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு எட்டு இடங்கள் கிடைத்திருந்தன. மேற்கு வங்கத்தில் மீதமுள்ள 24 இடங்களில் கடந்த தேர்தலில் 8 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இடதுசாரிகள் பலம் பெற்று வரும் தெற்கு வங்கத்தின் தொகுதிகளில் பாஜகவால் எதிர்பார்த்த முன்னேற்றத்தை எட்ட முடியாது. பிஜேடியுடன் நேரடியாக மோதும் ஒடிசாவில் மட்டுமே தனது நிலையை மேம்படுத்த முடியும் என்று பாஜக நம்புகிறது. எந்த கூட்டணியும் இல்லாமல் தனித்து போட்டியிடும் பஞ்சாபில் தற்போது உள்ள இரண்டு இடங்களை பாஜக தக்கவைப்பது கடினம்.
- தேசாபிமானியில் எம்.பிரசாந்த்,
தமிழில் சி.முருகேசன்