india

பாஜகவும்... படுதோல்வியும்...

7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்த லில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. மொத்தமுள்ள 13 தொகுதிகளில் 11 தொகுதி களில் தோல்வியை சந்தித்துள்ளது.

இமாசலப் பிரதேசம்

இமாசலப் பிரதேச மாநிலத்தில் டெஹ்ரா,  ஹமிர்பூர் மற்றும் நலகர் ஆகிய 3 தொகுதிக ளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், காங்கி ரஸ் வேட்பாளர்கள்-முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி கமலேஷ் தாக்கூர் டெஹ்ரா வில் 9 ஆயிரத்து 399 வாக்குகள் வித்தியா சத்திலும், ஹர்தீப் சிங் பவா நலகரில் 8 ஆயி ரத்து 990 வாக்குகள் வித்தியாசத்திலும் பாஜக வேட்பாளர்களைத் தோற்கடித்துள்ளனர். ஹமிர் பூர் தொகுதியில் மட்டும் பாஜகவின் ஆஷிஷ் சர்மா 1571 வாக்குகள் வித்தியாசத்தில் தப்பிப் பிழைத்துள்ளார்.

உத்தரகண்ட்

உத்தரகண்ட்டில் பாஜக ஆட்சி நடக்கும் நிலை யில், இங்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் லக்பத் சிங் புடோலா, காஜி நிஜாமுதீன் ஆகியோர் முறையே  பத்ரிநாத் தொகுதியில் 5224 வாக்குகள் வித்தி யாசத்திலும், மங்களூர் தொகுதியில் 422 வாக்குகள் வித்தியாசத்திலும் பாஜக வேட்பா ளர்களைத் தோற்கடித்துள்ளனர்.

மத்தியப்பிரதேசம்

பாஜக ஆளும் மத்தியப்பிரதேசத்தில் ஒரு தொகுதியில் (அமர்வாரா) மட்டுமே இடைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், இங்கு பாஜக வேட்பாளர் கம்லேஷ் பிரதாப் ஷா பல சுற்றுக்கள் வரை பின்னடைவைச் சந்தித்து வந்தார். இறுதி யாக 3037 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி யின் விளிம்பில் இருந்து அவர் தப்பியுள்ளார்.

பஞ்சாப்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மேற்கு தொகுதி யில் ஆம் ஆத்மி வேட்பாளர் மொகிந்தர் பகத், பாஜக வேட்பாளர் ஷீதல் அங்கூரை 37 ஆயி ரத்து 325 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்க டித்தார். பாஜக வேட்பாளர் ஷீதல் அங்கூர் முன்பு  ஆம் ஆத்மியில் இருந்தர். எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, கடந்த மார்ச் மாதம் தான் பாஜகவில் இணைந்திருந்தார். இடைத் தேர்தலில் அவரையே பாஜக வேட்பாளராக நிறுத்தியது. இருந்தும் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

மேற்குவங்கம்

மேற்கு வங்கத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனா காட் தக்சின், பக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலை யில், இந்த நான்கு தொகுதிகளிலுமே பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.

இங்கு திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) வேட்பா ளர்கள் கிருஷ்ண கல்யாணி, முகுத் நமி அதிகாரி, மதுபர்ணா தாக்குர் மற்றும் சுப்தி பாண்டே ஆகி யோர் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது திரி ணாமுல் வெற்றி பெற்றுள்ள 4 தொகுதிகளும் முன்பு பாஜக வசம் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சி. அன்புமணி 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிடம் தோற்றுப் போனார்.

பீகார்

பீகாரின் ரூபாலி தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சங்கர் சிங்கிடம், பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதாதளம் வேட்பா ளர் கலதர் பிரசாத் மண்டல் 8246 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளார்.