india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட வங்கதேச எம்.பி.,  அன்வருல் அசிம் அனாரின் உடல் பகுதிகள் கொலை நடந்தாக கூறப்படும் அடுக்குமாடி குடி யிருப்பின் செப்டிக் டேங்கில் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொல்கத்தா போலீசாரும், வங்கதேசத்தை சேர்ந்த புலனாய்வு அதிகாரிகளும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன்  காணப்பட்ட பங்குச் சந்தைகள் குறியீடு எண்  கள் குறைந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 668 புள்ளிகள் சரிந்து  74,503 புள்ளிகளில் நிறைவடைந்தது. சென்செக்ஸ்  பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறு வனங்களின் பங்குகள் விலை குறைந்த அளவில் வர்த்தகமாயின. அதே போல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 183 புள்ளிகள் சரிந்து 22,705 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

தில்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், ராஜஸ் தான், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜம்மு, இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரபேல் விமான கொள்முதல் தொடர்பாக மோடி அரசு மீது ஏற்கெனவே பல்வேறு ஊழல்  புகார் எழுந்துள்ள நிலையில், ரூ.50,000 கோடி யில் 26 ரபேல் விமானங்களை இந்தியா கொள்  முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரான்ஸ் குழு வியாழ னன்று இந்தியா வருவதாகவும் தகவல் வெளி யாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் “பிரி  பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு” ஆகிய வற்றிற்கான ரீசார்ஜ் கட்டணத்தை,10 முதல் 17 சதவீதம் வரை உயர்த்தலாம் என் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான  பின் இந்த கட்டண உயர்வு அமலாகும் என கூறப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை ஒட்டி ஆந்திராவில் ஜூன் 3,4,5 ஆகிய  3 நாட்கள் மதுபானக் கடைகளை மூட உத்தரவி டப்பட்டுள்ளது.

பெங்களூரு
விமான நிலையத்திலேயே வளைக்கப்படுகிறார் பிரஜ்வால் ரேவண்ணா

பாஜக கூட்டணி கட்சியான மதச்  சார்பற்ற ஜனதா தள தலை வரும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வால்  ரேவண்ணா (33), 300 பெண்களை பாலி யல் பலாத்காரம் செய்த விவகாரம் தொடர்பாக கடந்த ஏப்ரல் 25 அன்று  3000க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள்  வெளியானது. வீடியோ வெளியானது டன் மோடி அரசின் உதவியால் (எம்பிக்  களுக்கான பாஸ்போர்ட்) வெளிநாட் டிற்கு தப்பிச் சென்றார். தற்போது அவர்  ஜெர்மனியில் இருப்பதாக தகவல் வெளி யான நிலையில், அவரை கைது செய்ய  கர்நாடக சிஐடி பிரிவு சர்வதேச போலீசார்  உதவியுடன் தீவிரமாக இறங்கியுள்ளது. 

இந்நிலையில், ஜெர்மனியின் தலை நகர் மூனிச் நகரில் இருந்து பெங்களூரு செல்லும் விமானத்திற்கு பிரஜ்வால்  ரேவண்ணா முன்பதிவு செய்து இருப்ப தாகவும், வெள்ளியன்று இரவுக்குள்  அவர் பெங்களூரு திரும்ப உள்ளதாக வும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த  தகவலையடுத்து பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் கர்  நாடகா எஸ்ஐடி கண்காணிப்பு வளை யத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனிடையே ஹாசன் மாவட்ட நீதி மன்றத்தில் பிரஜ்வால் ரேவண்ணா முன்  ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாட்னா
மாணவர் கொலை மூலம் வன்முறையைக் கிளப்ப பாஜக திட்டம்

பாஜக கூட்டணி ஆளும் பீகார்  மாநிலதின் பாட்னா சட்டக்கல்  லூரி வளாகத்தில் திங்க ளன்று இறுதியாண்டு படிக்கும் மாண வர் ஹர்ஷ் ராஜ் (22) என்பவர் தேர்வு  எழுதி விட்டு வெளியே வந்த போது, அடை யாளம் தெரியாத கும்பலால் அடித்துக்  கொல்லப்பட்டார். இந்த விவகாரம்  தொடர்பாக சந்தன் யாதவ் என்பவரை  போலீசார் கைது செய்து மற்ற குற்றவாளி களை கைது செய்யும் நடவடிக்கை யை தீவிரப்படுத்தியுள்ளனர். பாஜக  கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி  கட்சிக்கு (ராம் விலாஸ் பஸ்வான்) ஆதர வாக பிரச்சாரம் மேற்கொண்டதால் “இந்  தியா” கூட்டணி கட்சியான ஆர்ஜேடி தொண்  டர்களால் ஹர்ஷ் ராஜ் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டி ஜூன் 1 அன்று நடைபெற வுள்ள கடைசி கட்ட தேர்தலில் வன்முறை யை பாஜக கிளப்ப திட்டமிட்டுள்ளதாக வும் தகவல் வெளியாகியுள்ளது.

இம்பால்
வடகிழக்கு மாநிலங்களையும் புரட்டியெடுத்த ரெமல் புயல்
பலி 34 ஆக உயர்வு

 

மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே மே 26 அன்று நள்ளிரவில் கரையை  கடந்த ரெமல் புயல், மேற்குவங்கத் தில் கடும் சேதாரத்தை ஏற்படுத்தியது. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 135 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் மேற்கு வங்க மாநிலத்தின் 5 கடலோரப் பகுதிகளில் சுமார் 30,000 வீடுகள் சேதமடைந்தன. 1,700 மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில், 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

இந்நிலையில், மேற்கு வங்கம் மட்டுமின்றி  வடகிழக்கு மாநிலங்களிலும் சூறைக்காற்றுடன்  கூடிய கனமழையுடன் ரெமல் புயல் நகர்ந்து  சென்றுள்ளது. கரை கடந்த புயல் பெரும் சூறா வளியாக மேகாலயாவின் நிலப் பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. இதனால், மிசோரம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த 4 நாட்களாக  அதீத அளவில் கனமழை பெய்து வருகிறது. மிசோரம் மாநிலத்தில் கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து 27 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் கல்லூரி மாணவர்  உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேகாலயா, நாகா லாந்து, மணிப்பூர் மாநிலங்களிலும் கன மழைக்கு சிலர் உயிரிழந்த நிலையில், வட கிழக்கு மாநிலங்களில் ரெமல் புயலால் உயிரி ழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. 
 

;