india

img

சுவாதி மலிவால் பாஜகவின் சதியில் சிக்கியுள்ளார் ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தில்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம்  ஆத்மி கட்சியின் மாநிலங்க ளவை எம்பியுமான சுவாதி மலிவால்  கடந்த மே 13 அன்று தில்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்குச்  சென்றார். சென்ற பின் போலீஸ்  கட்டுப்பாட்டு அறையை தொலை பேசியில் தொடர்புகொண்ட  சுவாதி மலிவால், “முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்  போது கெஜ்ரிவாலின் செயலாளர் பிபாவ் குமார் என்னைத் தாக்கினார்” என்று தெரிவித்திருக்கிறார்.

புகார் கொடுக்காமல் வழக்கு
பின்னர்  சுவாதி மலிவால், நேரில்  காவல் நிலையம் சென்றாலும் அவர்  முறைப்படி புகார் எதுவும் கொடுக்க வில்லை. ஆனாலும் மோடி அரசின்  கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்  துறை,  சுவாதி மலிவாலைத் தாக்கி யதாக அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச்  செயலாளரான பிபாவ் குமார் மீது மே 16 அன்று பல்வேறு பிரிவு களின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்தது.  புகார் கொடுக்காமல் வழக்குப் பதிவு  செய்தது ஏன்? என சந்தேகம் கிளம்பி யது. இதற்கு பதிலளிக்கும் விதமாக  சுவாதி மலிவால் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்,”இன்னொரு கட்சி யின் அறிவுறுத்தலின்படி நான் நடந்து கொள்வதாக சொல்கிறார்கள். அவர்  களை கடவுள் மகிழ்ச்சியாக வைத்தி ருக்கட்டும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் கூறினார். அடுத்த சில மணிநேரங்களில் பாஜகவினர் அர விந்த் கெஜ்ரிவாலின் வீடு, அலுவல கம் முன்பு போராட்டம் நடத்தினர். இத னால்  சுவாதி மலிவாலின் பிரச்  சனை பாஜகவால் கிளப்பப்பட்டதா  என சமூக வலைத்தளங்களில் பல் வேறு சந்தேக கருத்துக் கணைகள் கிளம்பின.

இதனையடுத்து  சுவாதி மலி வால் மீண்டும் டுவிட்டர் எக்ஸ் பக்  கத்தில், “நாட்டில் முக்கியமான  தேர்தல் நடைபெற்றுக்கொண்டி ருக்கிறது.  சுவாதி மலிவாலைவிட நாட்டின் பிரச்சனைகள் தான் முக்கி யம். இந்த விவகாரத்தை அரசிய லாக்க வேண்டாம் என்று பாஜக வினரைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஒரு நழுவல் டுவிட்டை பதிவு  செய்தார்.

ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
 சுவாதி மலிவாலை தாக்கியதாக  கூறப்படும் புகாரில் தில்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியா ளர் பிபாவ் குமாரின் முன்ஜாமீன்  வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தால், அவர் சனியன்று கைது செய்  யப்பட்டார்.

இந்நிலையில், தில்லி முதல்வர் கெஜ்ரிவாலை சிக்க வைக்கவே பாஜக சதி செய்து வருவதாக ஆம்  ஆத்மி மூத்த தலைவரும், தில்லி  அமைச்சருமான அதிஷி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “தில்லி மகளிர்  ஆணையத்தில் ஒப்பந்தப் பணியா ளர்களை சட்டவிரோதமாக ஆள் சேர்ப்பு செய்தது தொடர்பாக  சுவாதி  மலிவால் மீது ஊழல் தடுப்புப் பிரிவு  வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்  கல் செய்யப்பட்டு, தண்டனைக்கான நேரம் நெருங்கியுள்ளது. அதனால்  தான் இந்த வழக்கை பயன்படுத்தி  சுவாதி மலிவால் சதியில் சிக்க  வைக்கப்பட்டுள்ளார் என நம்பு கிறோம். உள்துறை அமைச்சகம் முதல் தில்லி போலீஸ் வரை பாஜக வின் முழு அரசு இயந்திரமும் எப்படி  இயங்குகிறது என்பதை திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் பார்க்க முடிந்தது. பிபாவ் குமாரின் கோரிக்கையின் பேரில், வெள்ளியன்று நாள் முழு வதும் நீதிமன்றம், இந்த வழக்கில் எப்ஐஆர் நகலை காவல்துறையிடம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஆனால் எப்ஐஆர் நகல் கொடுக்கப்  படவில்லை. எப்ஐஆர் அனைத்து  ஊடகங்களுக்கும் பாஜகவால் அனுப்பப்பட்டுள்ளது. விளக்கம் கேட் டால் தில்லி காவல்துறையின் எப்ஐஆர் கூருணர்வு மிக்கது; எனவே  அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க  முடியாது. குற்றம் சாட்டப்பட்ட வர்களுக்கும் கொடுக்க முடியாது  என பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறை கூறு கிறது. ஆனால்  சுவாதி மலிவாலின் எப்ஐஆர் சமூகவலைத்தளங்களில் பாஜகவினர் மூலம் வைரலாகி வரு கிறது” என கூறினார்.

;