india

img

அமலாக்கத்துறையை கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்த உச்சநீதிமன்றம்

மதுபானக் கொள்கை வழக்கு  மூலம் ஆம் ஆத்மி கட்சியை  ஒடுக்கவும், அக்கட்சி ஆளும்  தில்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்க ளில் ஆட்சியை கலைக்கவும் மத்  திய அமைப்புகள் மூலம் ஆம்  ஆத்மி தலைவர்களை அடுத்த டுத்து சிறையில் அடைத்து வரு கிறது மோடி அரசு. அதாவது மது பானக் கொள்கை வழக்கு மூலம்  ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாள ரும், தில்லி முதல்வருமான அர விந்த் கெஜ்ரிவால், தில்லி முன்  னாள் துணை முதல்வர் மணீஷ்  சிசோடியா, முன்னாள் சுகாதாரத்  துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி  சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்  யப்பட்டு தற்போது வரை சிறையில்  உள்ளனர். 

இதில் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஒருவருடத் திற்கு மேலாகவும், சஞ்சய் சிங்  ஆறு மாத காலத்திற்கு மேலாக வும் சிறையில் உள்ளனர். இந்நிலை யில், ஜாமீன் கோரி ஆம் ஆத்மி எம்பி  சஞ்சய் சிங், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள்  சஞ்சீவ் கண்ணா, திபங்கர் தத்தா, பி.பி.வரலே ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் செவ்வாயன்று விசார ணைக்கு வந்தது. விசாரணையின் பொழுது நீதிபதிகள்,” வழக்கின்  உண்மை நிலவரம் என்னவென் றால், வழக்கு தொடர்பாக இது வரை பணம் எதுவும் மீட்கப்பட வில்லை. அப்படி இருக்கையில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கை  ஏன் 6 மாத காலமாக நீதிமன்ற காவல்  மூலமாக சிறையில் வைத்துள்ளீர் கள்? அவருக்கு தற்போது காவல் தேவையா, இல்லையா? என்பதை  நீதிமன்றம் முதலில் அறிய விரும்பு கிறது. அவர் ரூ.2 கோடி லஞ்சம்  பெற்ற குற்றச்சாட்டை விசாரணை யில் கூட நீங்கள் அறிந்துகொள்ள லாம்” என கூறினர். 

தொடர்ந்து சஞ்சய் சிங்கிற்கு  ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை ஆட்சேபணை தெரிவிக்காத நிலை யில், சஞ்சய் சிங் ஜாமீனில் இருக்  கும் வரை இந்த வழக்கு குறித்து  எந்த கருத்தும் தெரிவிக்க வேண் டாம்” என்ற நிபந்தனையுடன் சஞ் சய் சிங்குக்கு ஜாமீன் வழங்கி நீதி பதிகள் உத்தரவிட்டனர்.