n நாடாளுமன்ற தேர்தல் தயாரிப்புப் பணிகளில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளோம். திமுக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. அது விரைவில் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.
n தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக சேர்ந்திருந்தாலும் தனித்தனியாக இருந்தாலும் அவர்களை தேர்தலில் முறியடிக்கும் வகையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பணிகள் அமையும்.
n அதிமுகவைப் பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலில் ஏதேனும் ஒரு கூட்டணியை அமைத்துவிடலாம் என்று கடைவிரித்து அமர்ந்திருக்கிறது. பல கட்சிகள் வந்து தங்களது கூட்டணியில் இணையும் என்று அவர்கள் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில் சிலர், கூட்டணிக்காக எல்லா பக்கமும் பேரம் பேசுகிற ஒரு நிலை தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறது?
n நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் தேர்தல் பொதுக்கூட்டத்தைப் போல, நாங்கள் 300, 400 இடங்களில் வருவோம் என்று கூறுகிறார். மீதியுள்ள இடங்களை ஏன் விட்டு வைத்தாரோ?
விழுப்புரத்தில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியிலிருந்து...
n ராமர் கோவிலுக்காக பாபர் மசூதியை இடித்தவர் அத்வானி. ஆனால் கோவில் திறப்புக்கு அவருக்கு அழைப்பில்லை. இப்போது ஆறுதல் பரிசாக பாரத ரத்னா கொடுத்திருக்கிறார்கள்.