india

img

ஆம் ஆத்மியின் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

புதுதில்லி,டிசம்பர்.13- தில்லி சட்டமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. 
தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற 2025 பிப்ரவரி மாதத்திற்கு முன் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. தில்லியின் தற்போதைய ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி கட்சி, தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் 38 வேட்பாளர்கள் அடங்கிய இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது.
முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நியூ தில்லி தொகுதியிலும் தற்போதைய முதல்வர் அதிஷி மீண்டும் கல்காஜியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.