india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

டிச.31 அன்று தமது கட்சித் துவக்கத்தை அறிவிக்கப்போவதாக கூறியுள்ள நடிகர் ரஜினிகாந்த், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி என்பவரை அறிவித்துள்ளார். இவர் நேற்றைய தினம் வரை பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்தவர்.   (கண்ணோட்டம்: 3)

                                           ********************

ரஜினியின் அரசியல் வருகையால் பாஜகவில் குழப்பம் ஏற்படும்என்று பாஜக மூத்த தலைவர் சுப்ர மணியன் சாமி தெரிவித்துள்ளார். 

                                           ********************

இந்துசமய அறநிலையத் துறைக்குசொந்தமான கோயில்களில் இனி தமிழிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும்; தவறினால் ரூ.10 லட்சம் அபராதம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

                                           ********************

பெட்ரோல் லிட்டருக்கு 85.59 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.24 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

                                           ********************

நாட்டின் சிறந்த காவல்நிலையத்திற்கான டாப் 10 பட்டியலில் சேலம் சூரமங்கலம் காவல்நிலையத் திற்கு 2வது இடம் கிடைத்துள்ளது.

                                           ********************

பழைமையான கல்வெட்டுகளைப் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

                                           ********************

இந்தியாவில் 2018ம் ஆண்டை விட 2019ல் மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

                                           ********************

புரெவி புயல் காரணமாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

                                           ********************

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவை குண்டம் அருகே 2500 ஆண்டுகள் பழமையான கீறல்கள் எனப்படும்கிராவிட்டி பானை ஓடுகள் 4 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

                                           ********************

சென்னை - பழனி - பாலக்காடுசிறப்பு ரயில் டிசம்பர் 8 ஆம் தேதி முதல் சேவையை துவக்க உள்ளது.

                                           ********************

விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டது என கூறி பஞ்சாப் முன்னாள் முதல்வர்பிரகாஷ் சிங் பாதல் பத்ம விபூஷண் விருதினை அரசுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளார். 

                                           ********************

தில்லி போராட்டத்தில் இறந்த பஞ்சாப் விவசாயிகள் இருவருக்குதலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். 

                                           ********************

2026ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கோளில் மனிதனை தரையிறக்கும் முயற்சி வெற்றி பெறும்என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

                                           ********************

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்தை வரும் மார்ச் முதல் வெளிச்சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர இந்தியா வின் சீரம் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

                                           ********************

புரெவி புயல் காரணமாக புதுக் கோட்டையில் பெய்த தொடர் கனமழையால் இங்குள்ள அம்புலி ஆற்றில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு காட்டாறு வெள்ளம் பெருக்கெடுத்தது. 

                                           ********************

டிரம்ப் அரசால் கொண்டுவரப்பட்ட எச்1 பி விசா தொடர்பான இரண்டு விதிகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் எச்1பி விசா மூலம் அதிகம் பயனடைந்து வரும் இந்திய ஐடி ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

;