india

img

மணிப்பூரில் ஒன்றிய அரசின் குழு எங்கே?

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான பாஜக ஆளும் மணிப்பூரில் கடந்த மே  மாதத்திலிருந்து குக்கி பழங்குடி யின மக்களுக்கும், மெய்டெய் மக்க ளுக்கும் இடையே தொடர்ந்து வன்  முறையுடன் கூடிய மோதல் அரங்  கேறி வருகிறது. இந்த மோதலால் மாநிலம் முழுவதும் இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் உயிரி ழந்த நிலையில், பல்லாயிரக்கணக் கான மக்கள் சொந்த மாநிலத்தி லேயே அகதிகளாக வாழ்ந்து வரு கின்றனர். தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறினாலும், மாநிலத்தில் அமைதி நிலவுவதாக  ஆளும் பாஜக அரசு அடிக்கடி செய்தி களை வெளியிட்டு வருகிறது.  திங்களன்று கூட தெங்னௌபால் மாவட்டத்தில் அரங்கேறிய துப்  பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த னர். 

இந்நிலையில், மணிப்பூரில்  அமைதியை நிலைநாட்டுவதற் காக ஒன்றிய அரசு அமைத்த குழு எங்கே? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர்  கூறுகையில்,”மணிப்பூரில் ஏழு  மாதங்களாக வன்முறை தொட ர்ந்து கொண்டிருப்பது மன்னிக்க முடியாதது. கடந்த 215 நாட்களில் மட்டும் 60,000க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்  கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கை  நிலைமை மிகவும் மோசமானதாக வும், மனிதத்தன்மை அற்றதாக வும் உள்ளது. பைரேன் சிங் தலை மையிலான பாஜக ஆட்சி நடை பெறும் மணிப்பூர் மாநிலத்தில் சட்  டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்த தற்கு யார் பொறுப்பு? மணிப்பூரில் அமைதி, இயல்புநிலை மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுக்க, ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட அமைதிக் குழு ஏன் எந்தப் புலப்  படும் வேலையையும் செய்ய வில்லை? பிரதமர் நேரடியாக தலை யிட்டு விரிவாக ஆலோசனை நடத்தினால்தான் மணிப்பூரில் வன்  முறையை முடிவுக்கு கொண்டு வர  முடியும்” என அவர் குறிப்பிட்டுள் ளார்.