india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்....

பத்திரப் பதிவுத் துறையின் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து மக்கள் புகார் அளிக்கலாம். பத்திரப் பதிவு துறை முழுமையாக சீரமைக்கப்படும் என்று பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். 

                          ****************

சென்னையில் இருந்து கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் வரை பயணிகள் படகு போக்குவரத்து சேவைக்கு சென்னை துறைமுகம் திட்டமிட்டு வருகிறது. தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த சேவைக்கான பணிகள் தொடங்கி உள்ளதாக சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

                          ****************

இந்தியாவுக்கு இரு கடற்படை ஹெலிகாப்டர்களையும் பி-8 பொசைடன் கண்காணிப்பு விமானத்தையும் விற்பனை செய்வதால் இரு தரப்பு ஒத்துழைப்பு மேம்படும் என்று அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

                          ****************

உலகிலேயே அதி வேகமாகச் செல்லும் ரயிலை சொந்தமாகத் தயாரித்து சீனா அறிமுகம் செய்துள்ளது.

                          ****************

தில்லி செங்கோட்டைக்குள் நுழைய இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்டம் முடிவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

                          ****************

ரஷ்யாவின் சுகோவ்ஸ்கியில் நடைபெறும் மேக்ஸ் சர்வதேச விமானக் கண்காட்சியில் முதல்முறையாக இந்திய விமானப் படையின் சாரங் ஹெலிகாப்டர் சாகசக் குழு பங்கேற்கவுள்ளது.

                          ****************

நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையில்லா சான்று பெறுவதிலிருந்து வேளாண் துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.

                          ****************

கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.,) சேர, வரும் 28 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

                          ****************

சுவிட்சர்லாந்து அரசுடன் செய்துள்ள ஒப்பந்தப்படி இந்தியர்களின் ‘‘டிபாசிட்” விபரங்கள் பெறப்படுவதாக, மாநிலங்களவையில் ஒன்றிய நிதித்துறை இணைஅமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.