வெள்ளி, பிப்ரவரி 26, 2021

india

img

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் தனியார் நிறுவனங்கள்?

புதுதில்லி:
மருத்துவர், செவிலியர்கள் மற்றும் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி போடுவதற்கான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி விநியோகம் மற்றும் செயல்பாடுகளில் தனியார் நிறுவனங்களை களமிறக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி வழங்கும் பணிகளை தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து 50 வயதுக்கு மேற்பட்ட 27 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இதில் 40 முதல் 50  சதவீத தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் மூலம் விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

;