ஒன்றிய அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 1261 பணியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்;
மொத்த காலியிடங்கள்: 1261
பணி: மெடிக்கல் ஆபிசர் (சுகாதாரத் துறை)
காலியிடங்கள்: 584
பணி: உதவி டிவிஷனல் மெடிக்கல் அலுவலர் (ரயில்வே)
காலியிடங்கள்: 300
பணி: மெடிக்கல் அலுவலர் (தில்லி முனிசிபல் கவுன்சில்)
காலியிடங்கள்: 376
தகுதி: மருத்துவத் துறையில் எம்.பி.பி.எஸ் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 2023 ஆகஸ்ட் 1ஆம் தேதி அடிப்படையில் கணக்கிடப்படும். 32, 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, பெர்சனாலிட்டி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: upsc.gvo.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.200. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 9.5.2023
மேலும் விவரங்கள் அறிய upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.