புதுதில்லி:
பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸை தளமாகக் கொண்டு செயல்பட்டுவரும், ஐரோப்பிய யூனியனின் ‘டிஸ் இன்போலேப்’ (EU DisinfoLab) என்ற அமைப்பு, இந்துத்துவா கூட்டத்தின் மோசடி குறித்து அதிர்ச்சியளிக்கும் வகையிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.
‘இந்தியன் க்ரோனிகல்ஸ்’ (Indian chronicles) என்ற தலைப்பிலான ‘டிஸ்இன்போலேப்’ நிறுவனத்தின் இந்த அறிக்கைகள், தற்போது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த‘லெஸ் ஜோர்ஸ்’ என்ற செய்தி நிறுவனத் தால் வெளியிடப்பட்டு உள்ளன.அதில், இந்திய ஆட்சியாளர்களுக்கு- குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் மத்தியபாஜக அரசுக்கு ஆதரவாகவும் பாகிஸ்தான்,சீனா போன்ற நாடுகளுக்கு எதிராகவும்- கருத்துக்களை உருவாக்குவதற்காக, உலகம் முழுவதும் 750-க்கும் மேற்பட்ட போலிஊடகங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த பொய்ப் பிரச்சாரத்திற்கு இந்தியசெய்தி நிறுவனமான ஏஎன்ஐ (ஏசியா நியூஸ்இன்டர்நேஷனல்) மற்றும் ஸ்ரீவஸ்தவா குழுமம் ஆகியவை முக்கிய ஏஜெண்டுகளாகசெயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஸ்ரீவஸ்தவா குழுமம் மற்றும்அதன் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் போலியான வலைத் தளங்கள் பாஜக-வுக்கு ஆதரவான தகவல் களை பரப்பி வருவதாகவும், அந்த பொய்யான தகவல்களை உண்மைச் செய்திகள்போல மாற்றி ஏஎன்ஐ நிறுவனம் வெளியிட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.2019-ஆம் ஆண்டு, சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்குப் பின்னர், ஸ்ரீவஸ்தவா குழுமத்தினர்தான் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற உறுப்பினர்களை காஷ்மீருக்கு அழைத்து வந்தவர்கள். மோடி அரசுக்குஆதரவான அறிக்கைகளை பெறுவதற்காக,ஐரோப்பிய யூனியன் தலைவர்களை ஸ்ரீவஸ்தவா குழுமத்தினர், அடிக்கடி சந்தித் துள்ளனர்.
இதனடிப்படையில் ஸ்ரீவஸ்தவா குழுமத்தால் நடத்தப்படும் போலி வலைத் தளமான ஈ.பி. டுடே-வில் (EP Today), ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான ரைஸ்ஸார்ட் ஸார்னெக்கி என்பவர் பாகிஸ்தானுக்கு எதிரான மோடி அரசின் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’கை ஆதரித்து கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.ஏஎன்ஐ நிறுவனம் தன் பங்கிற்கு, ஈ.பி.டுடேவில் வந்த ரைஸ்ஸார்ட் ஸார்னெக்கியின் கட்டுரையை, ‘இந்தியாவுக்கு ஐரோப் பிய யூனியனின் அதிகாரப்பூர்வ ஆதரவு’ என மாற்றி செய்தி வெளியிட்டுள்ளது. ஏஎன்ஐ நிறுவன செய்தியை, ‘எக்கனாமிக் டைம்ஸ்’ போன்ற நிறுவனங்களும் அப்படியே வெளியிட்டுள்ளன.
இதனை அம்பலப்படுத்தியுள்ள ‘‘டிஸ்இன்போலேப்” அறிக்கை, மிகைப்படுத் தப்பட்ட, தவறான, பொய் பிரச்சாரங்கள் என்பது உலகின் பல்வேறு நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைதான் என்றபோதும், கடந்த15 ஆண்டுகளில் கண்டிராத, குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றுள்ள ஒருமிகப்பெரிய பொய் பிரச்சார வலைப்பின் னலை ( largest network) தாங்கள் இப்போதுதான் பார்த்திருப்பதாக குறிப்பிட் டுள்ளது.20-ஆம் நூற்றாண்டின் முன்னணி சர்வதேச சட்ட அறிஞர்களில் ஒருவரும், 39 ஆண்டுகளாக ஹார்வர்ட் சட்ட ஆசிரிய உறுப்பினருமான – லூயிஸ் ஷோன் 2007-ஆம்ஆண்டு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் சி.எஸ்.ஓ.பி. (Commission to Study the Organisation of Peace -CSOP) சார்பாக பங்கேற்று இந்தியாவிற்குஆதரவாக பேசியதாகவும் மேலும் 2011-ஆம்ஆண்டு வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியதாகவும் ஏ.என்.ஐ. செய்தி பரப்பியுள்ளது.ஆனால், பேராசிரியர் லூயிஸ் ஷோன்2006-ஆம் ஆண்டே தனது 92 வது வயதில் இறந்து விட்டார் என்று ‘டிஸ்இன்போலேப்’ அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.இறந்தவர்களின் பெயர்களிலும் செயலற்ற அமைப்புகளின் பெயர்களிலும் தவறான மற்றும் பொய் பிரச்சாரம் செய்வதையேநோக்கமாக கொண்டு ஸ்ரீவஸ்தவா குழுமம் செயல்பட்டு வருகிறது என்றும் ‘டிஸ்இன்போலேப்’ அறிக்கை குறிப் பிட்டுள்ளது.