செவ்வாய், செப்டம்பர் 28, 2021

india

img

டிச.31 வரை சர்வேதேச விமானப்  போக்குவரத்துக்கு தடை  மத்திய அரசு அறிவிப்பு...

புதுதில்லி:
சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக விமானச்சேவை மற்றும் அனைத்துப் போக்குவரத்து களும் மார்ச் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டன.  இதனைத்தொடர்ந்து நவம்பர் மாதம் இறுதி வரை சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டது. ஆனால் சரக்கு சேவை விமானங்களுக்கும், வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியர்களை அழைத்து வருவதற்காக வும், இந்தியாவில் சிக்கி யிருந்த வெளிநாட்டினரை அவரவர் நாடுகளில் சேர்க்கவும் வந்தே பாரத் என்ற திட்டத்தில் சிறப்பு விமானங்கள் அரசின் வழிகாட்டு தலின்படி இயக்கப்பட்டன.இந்நிலையில் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை டிசம்பர்31-ம் தேதி வரை நீட்டிக்கப் படுவதாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள் ளது.

;