india

img

மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிய இந்தியா... 3 மாதக் கர்ப்பிணி சபூரா சர்க்கார் கைது விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அவை கண்டனம்....

புதுதில்லி:
சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக, மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட் டத்தை எதிர்த்து, கடந்த 2020-ஆம்ஆண்டு நாடு முழுவதும் போராட் டங்கள் நடைபெற்றன. 

தலைநகர் தில்லியின் ஷாகீன் பாக் பகுதியில் ஜனநாயகவாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், இஸ்லாமியப் பெண்கள் நடத்திய தொடர்போராட்டம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்களும் பெருமளவில் போராட்டக்களத்தில் இறங்கினர். ஆனால், இந்தப் போராட்டத்தைதில்லி காவல்துறை மூலமும், சங்-பரிவார் கும்பலின் கொடூர வன் முறைக்கு 50-க்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்களை பலி வாங்கியும்மிகமோசமான முறையில் ஒடுக்கியமோடி அரசு, நூற்றுக்கணக்கானோரைக் கைது செய்தது. அனைத்தையும் செய்துவிட்டு,அதுமட்டுமன்றி, தில்லி வன்முறைக்கு உடந்தையாக செயல்பட்டதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ‘ஸ்வராஜ் அபியான்’ தலைவர் யோகேந்திர யாதவ், பொருளாதார நிபுணர் ஜயதி கோஷ்,தில்லி பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் ஆர்வலர் அபூர்வாநந்த் மற்றும் ஆவணப்பட இயக்குநர் ராகுல்ராய் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இவர்களில் ஜபராபாத் பகுதி சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட- தில்லி ஜாமியாமிலியா பல்கலைக்கழக மாணவி சபூரா சர்க்காரும் (27) ஒருவராவார். எம்.பில். மாணவியான இவர் ஏப்ரல்10 அன்று கைது செய்யப்பட்டார். இரண்டே நாளில் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால்,பிப்ரவரி மாதம் நடந்த மற்றொரு மறியல் வழக்கில், சபூராவின் பெயர் சேர்க்கப்பட்டு மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் 3 மாதக் கர்ப்பிணியாக இருந்தார். ஆனால், வட கிழக்கு தில்லியில் நடந்த வன்முறைக்கு சதித்திட்டம் தீட்டினார் என்று கூறி, சபூராவை கொஞ்சமும் ஈவிரக்கமில்லாமல் மத்திய பாஜக அரசு சுமார் 3 மாதம்சிறையில் அடைத்தது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகே ஜூன் மாதம் சபூராவுக்கு மீண்டும் ஜாமீன்கிடைத்தது.இந்நிலையில்தான் கர்ப்பிணியாக இருந்த சபூரா சர்க்காரின் கைது,சர்வதேச அளவில் மனித உரிமை இயக்கங்களின் கவனத்தை ஈர்த்தது. ஆஸ்திரேலியா, லாட் வியா, தென் கொரியா, ஜாம்பியா மற்றும் ஈக்குவேடார் நாட்டுப் பிரதிநிதிகள் அடங்கிய ஐக்கிய நாடுகள்மனித உரிமைக் குழுவின் (UnitedNations Human Rights Council’s- HRC) ஒரு அங்கமான “சட்டவிரோதக் கைதுக்கு எதிரான செயற்குழு(Working Group against Arbitrary Detentions - WGAD)”, சபூரா சர்க்காரின் கைது விவகாரத்தில் இந்திய அரசின் விளக்கத்தைக் கேட்டது. இந்திய அரசும் அதற்கு பதில் அளித்திருந்தது.

இந்திய அரசு அளித்த அந்த விளக்கத்தின் அடிப்படையில் ஐ.நா.மனித உரிமைக் குழுவின் “சட்டவிரோதக் கைதுக்கு எதிரான செயற்குழு”,தற்போது அறிக்கை வெளியிட்டுள் ளது.அதில், “சபூரா சர்க்காரின் கைதானது, சர்வதேச மனித உரிமை விதிகள் பிரிவு 2, 3, 7, 8, 9, 10, 11, 19, 20மற்றும் 21 ஆகிய விதிகளுக்கு எதிரானது என்றும், மனித உரிமைச் சட்டங்களை இந்தியா அப்பட்டமாக மீறியுள்ளது” என்றும் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக ஐ.நா.அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
காவல்துறையினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினராலேயே சபூரா சர்க்கார் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்ட பிறகும் மற்றொரு காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் மீண்டும்அவரைக் கைது செய்தது, அவர்மீது தவறான சட்டம் பாய்ந்துள்ளதையே தெளிவாக்குகிறது. அதுமட்டுமல்ல, உடனடியாக கைது செய்து, சிறையில் அடைப்பதற்கு எவ்வித தேவையும் எழாத நிலையில் சபூராவின் கைதை இந் திய அரசு அரங்கேற்றியுள்ளது. இதுஇந்திய அரசு சர்வதேச அளவில் ஒப்புக் கொண்ட மனித உரிமை விதிகளுக்குப் புறம்பானதாகும். கருத்துரிமை மற்றும், பேச்சுரிமைக்கு எதிரானதாக இந்த கைது உள்ளது. 

இந்திய நாட்டுக் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தனது கருத் தைத் தெரிவிக்கவோ, அதை எதிர்த்துஅமைதியான முறையில் போராட்டம் நடத்தவோ சபூரா சர்க்காருக்குமுழு உரிமை உண்டு. ஜாமியாஒருங்கிணைப்புக் குழுவின் (ஜேசிசி) ஊடக ஒருங்கிணைப்பாளராகவும், குடியுரிமை எதிர்ப்புச் சட்ட போராட்டங்களின் போது பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பவர்களில் ஒருவராகவும் சர்க்கார் இருந்தார் என்றநிலையில், அவரைக் கைது செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள், எதிர்க்கருத்து தெரிவிப்பவர்களை ஒடுக்கி, அவர்களின்உரிமையை முடக்க நடந்த முயற்சியாகவே முடிவுக்கு வரவேண்டி உள்ளது.

எந்தவொரு மனிதரின் சுதந்திர நடவடிக்கைகளையும் அரசு முடக்கக் கூடாது என்ற நிலையில், சபூரா சர்க்காரின் கைது மற்றும் சிறையில் அடைக்கப்பட்ட நடவடிக்கையானது, முற்றிலும் மனித உரிமைக்கு எதிரான செயலே ஆகும்.எனவே- உள்நாட்டு மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான மனிதஉரிமைகள் மற்றும் சர்வதேச ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஒரு உறுப்பினர் என்ற நிலையில்- சபூரா கைது விஷயத்தில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக, முழுமையான மற்றும் சுயேட்சையான விசாரணையை இந்திய அரசு உறுதிப்படுத்த வேண் டும். மனித உரிமை மீறலுக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கைஎடுக்க வேண்டும். வெற்றுத்தாளில் கையெழுத்திட வைக்கப்பட்டதாக சபூரா சர்க்கார் கூறியிருந்த நிலையில், சர்வதேச சட்டத்தின்படி சர்க்காருக்கு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு ஐ.நா. மனித உரிமைக் குழுவின் “சட்டவிரோதக் கைதுக்கு எதிரான செயற்குழு” அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.இதனிடையே, ஐநா மனித உரிமைக்குழுவின் இந்த அறிக்கை, தனக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளதாக சபூரா சர்க்கார்வரவேற்றுள்ளார். தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை கவனத்தில் எடுத்துக் கொண்டதற்காக மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் அவைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ள சபூரா சர்க்கார்.இதன்மூலம் அனைத்து மனித உரிமை பாதுகாவலர்களின் எதிர்காலம் மேம்படும்; அனைத்து அரசியல் கைதிகளும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்புகிறேன் என்று குறிப் பிட்டுள்ளார்.

;