இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்;
பணி: Curator in Grade ‘A’
காலியிடம்: 01
தகுதி: வரலாறு, பொருளாதாரம், நுண்கலை, தொல்லியல்,அருங்காட்சியகம், நாணயவியல் போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் 55 சதவிகிதம் மதிப்பெண்களுடன் முதுநிலைப்பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Architect on Full time Contract
காலியிடம்: 01
தகுதி: கட்டிடக்கலை பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Fire Officer in Grade 'A'
காலியிடம்: 01
தகுதி: பொறியியல் பிரிவில் தீ பொறியியல், பாதுகாப்பு மற்றும் தீ பொறியியல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.44,500
வயதுவரம்பு: 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு சென்னையில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரவினர் ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருகும் ரூ.600 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://opportunities.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.06.2022
தேர்வு நடைபெறும் தேதி: 09.07.2022
மேலும் விவரங்கள் அறிய https://opportunities.rbi.org.in அல்லது https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=4135 என்ற இணையதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.