வியாழன், செப்டம்பர் 23, 2021

india

img

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ரைட்ஸ் நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதன் விவரம்;
பணி: Engineer(Civil)

காலியிடங்கள்: 40

வயதுவரம்பு: 01.09.2021 தேதியின்படி 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: பட்டதாரி பிரிவினருக்கு மாதம் ரூ.22,353, பட்டயம் பிரிவினருக்கு ரூ.18,350 வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ, பி.டெக், பி.எஸ்சி தேர்ச்சியுடன் 6 ஆண்டு பணி அனுபவமும், பட்டயம் (டிப்ளமோ) முடித்தவர்கள் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 27.09.2021அன்று கொச்சியில் உள்ள ரைட்ஸ் நிறுவன வளாகத்தில் நடைபெறும்.

தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு வைக்கப்படும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர் தங்களது அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.09.2021

;