இந்திய பிரதமராக இருப்பவர் செய்தியாளர்களை சந்தித்து நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
மோடி பதவியேற்றதில் இருந்து செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்தே வந்தார். எதிர்கட்சியினர், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்திய பின்பும் மோடி செய்தியாளர்களை சந்திக்கவில்லை.
டென்மார்க் சென்ற மோடியை திடீரென பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்டதும் ஓ மை காட் (Oh My God) என்று அலறிய காணொளி சமூக வலைதளங்களின் வைரலானது.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது கடைசியாக 2014 ஜனவரி 3-ஆம் தேதி 100-க்கும் மேற்பட்ட செய்தியாளர்களின் சந்திப்பில் திட்டமிடப்படாத கேள்விகளை எதிர்கொண்டு பதிலளித்திருந்தார்.அதுவே, இந்தியாவுக்குள் பிரதமர் சந்தித்த கடைசி செய்தியாளர்கள் சந்திப்பாகும்.
மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் மணிக்கணக்கில் பேசும் பிரதமர் மோடி, ஊடகவியலாளர்களின் கேள்விகளை தவிர்க்கும் பொருட்டு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தாமல் இருப்பது மோடி அரசின் பாசிச தன்மையையே காட்டுகிறது.