india

img

குஜராத் கலவர வழக்கு:டீஸ்டா செதல்வாத்தின் இடைக்கால ஜாமீன் ஜூலை 19 வரை நீட்டிப்பு-உச்சநீதிமன்றம் உத்தரவு

குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் டீஸ்டா செதல்வாத்தை உடனடியாக சரணடையுமாறு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுருந்த நிலையில், அவருடைய இடைக்கால ஜாமீனை ஜூலை 19 வரை நீட்டித்துள்ளது உச்சநீதிமன்றம்.

கடந்த 2002-ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற இனக்கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீதான வழக்கை கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மனுதாரர்கள் உள்நோக்கத்துடன் தான் இந்த வழக்கை தொடுத்துள்ளனர். பல ஆண்டுகளாக இந்த பிரச்சனையை கொந்தளிப்பு நிலையிலேயே வைத்திருக்க முயன்றுள்ளனர். இவர்கள் அனைவரும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்ற நீதிமன்றத்தின் இந்த கூற்றுதான் காவல்துறையினர் உடனடியாக டீஸ்டாவை கைது செய்ய வழி வகுத்தது.கிரிமினர் சதி உட்பட 4 கடுமையான பிரிவுகளில் அவர் கைது செய்யப்பட்டார்.இதனையடுத்து, இதனை எதிர்த்து டீஸ்டா செதல்வாத் உச்சநீதிமன்றத்தை நாடினார்.உச்சநீதிமன்றம் அவருக்கு இடைகால ஜாமீன் வழங்கியது.

உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் காரணமாக போலீஸ் மற்றும் நீதிமன்றக் காவல் முடிந்ததுமே டீஸ்டா செதல்வாத் விடுவிக்கப்பட்டார்.ஆனால், இந்த வழக்கில் அவர் வழக்கமான ஜாமீன் கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தை நாடினார். அந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததோடு  அவர் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் உத்தவிட்டுருந்தது. இந்நிலையில் குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை கோரி உச்சநீதிமன்றத்தை அவர் நாடினார்.நீதிபதிகள் பிஆர் கவாய், ஏஎஸ் போப்பண்ணா, திபாங்கர் தத்தா அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை வழங்கியது.மேலும் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜூலை 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

யார் இந்த டீஸ்டா செதல்வாத்?

குஜராத் இனப்படுகொலை குறித்த கண்டனங்களை பலர் எழுப்பினாலும் குஜராத்துக்குள் அதற்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் மிகச்  சிலர்தான்! ஏனெனில் குஜராத்தை இந்துத் துவா கருத்துகள் மிக ஆழமாக ஆட்கொண்டிருந்தன. முஸ்லீம் சமூகம் மீது பொதுவான கோபமும் வெறுப்பும் அந்த சமூகத்தில் ஆழமாக புரையோடியிருந்தது. கோத்ரா நிகழ்வு இந்த  வெறுப்பை பல மடங்கு அதிகரித்தது. எனவே  அதற்கு எதிராக குரல் எழுப்ப அசாத்திய தைரியம் தேவையாக இருந்தது. இந்த படுகொலைகள் பயங்கரமானவை என எண்ணியவர்கள் கூட அதனை வெளியே சொல்ல முன்வரவில்லை. இந்த சூழலில்தான் குஜராத் மண்ணில் பிறந்து வளர்ந்த டீஸ்டா துணிச்சலாக எதிர் வினையாற்றினார். இந்த தைரியம் அவரது குடும்ப பின்னணியில் இருந்து வந்தது எனில்  மிகை அல்ல. அவரது தாத்தா எம்.சி.செதல்  வாத் இந்தியாவின் முதல் அட்டர்னி ஜென ரலாக பணியாற்றியவர். அவரது கொள்ளுத் தாத்தா சிமன்லால் ஹரிலால் செதல்வாத், ஜாலி யன்வாலாபாக் படுகொலைகள் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை குழுவில் இடம் பெற்ற ஒரே இந்தியர்! அவரது கணவர் ஜாவேத் ஆனந்த் ஒரு இஸ்லாமியர். சமூக செயற்பாட்டாளர்.

டீஸ்டா மற்றும் அவரது கணவரின் உறுதி யான செயல்பாடுகள் காரணமாகவே குல்பர்கா குடியுருப்பு மற்றும் நரோடா பாட்டியா படு கொலைகளை அரங்கேற்றிய கொடியவர்கள் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக நரோடா பாட்டியா கொலை வழக்கில் அன்றைய பெண் கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர்  மாயா கொட்னானி என்பவர் சிறைத்தண்டனை  பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அமைச்சர் மட்டுமல்ல; மருத்துவரும் கூட! எனி னும் படுகொலைகளில் தீவிர பங்கெடுத்தார் என குற்றம்சாட்டப்பட்டார். மனித உயிர்களைக் காப்பாற்ற போதிக்கப்படும் மருத்துவக் கல்வி  கூட மதவெறி முன்பு மண்டியிட்டு விட்டதை  மாயாகோட்னானியின் குற்றங்கள் உணர்த்தின.  அன்றைய முதல்வர் மோடி மற்றும் உள்துறை  அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் அரசியல் பிடி மானத்தையும் மீறி பல தண்டனைகளை பெற்றுத்தந்த டீஸ்டா மீது மிகப்பெரிய ஆத்தி ரம் சங் பரிவாரத்துக்கு இருந்தது. உச்ச நீதிமன்  றத்தின் தீர்ப்பு அந்த ஆத்திரத்தை நிறை வேற்றிக்கொள்ள வாய்ப்பை உருவாக்கி விட்டது.  ஆட்சியாளர்களை இழிவுபடுத்துகின்றனர் எனக்கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்  கூறும் இதே உச்சநீதிமன்றம்தான் 2004ம் ஆண்டு  ஒரு வழக்கில் “குஜராத்தை ஆள்பவர்கள் நவீன  நீரோக்கள்” எனவும் பெண்களும் குழந்தை களும் படுகொலை செய்யப்பட்ட பொழுது தமது முகத்தை வேறு திசையில் வைத்து கொண்ட னர் எனவும் குற்றம்சாட்டியது. பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகளை கொண்ட அமர்வு ஒத்த கருத்துடைய தீர்ப்பை வழங்கும் பொழுது அந்த தீர்ப்பை வடிவமைத்தது யார்  என்பதையும் குறிப்பிடுவார்கள். ஆனால்  இந்த தீர்ப்பை எழுதியது யார் என்பது குறிப்பி டப்படவில்லை எனவும் இதேபோல்தான் அயோத்தி தீர்ப்பிலும் குறிப்பிடப்படவில்லை எனவும் பிரபல மனித உரிமை வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கேள்வி எழுப்பியுள்ளார். நீதித்துறையின் பின்னோக்கிய பயணம் கவலை தருவதாக பலரும் கூறியுள்ளனர்.

டீஸ்டா செதல்வாத் தொடர்ந்து மத அடிப்படைவாதச் சக்திகளுக்கு எதிராகவும், அவர்களது வெறுப்புணர்வுக் கொள்கைகளை அம்பலப்படுத்துவதை நோக்கமாகவும் கொண்டு டீஸ்டா செதல்வாத் செயல்பட்டு வருகிறார்.