india

img

புதிய முப்படை தலைமை தளபதி நியமனம்

முப்படைகளின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், நாட்டின் ராணுவ விவகாரத்துறை செயலாளராகவும், அனில் சவுகான் பொறுப்பு வகிப்பார் எனவும் ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் கிழக்கு பிரிவுக்கு தளபதியாக இருந்த அனுபவம் கொண்ட அனில் சவுகான், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் நிலவிய பதற்றமான சூழல்களில் திறம்பட பணியாற்றியதாக கூறப்படுகிறது. சுமார் 40 ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணியாற்றி லெப்டினன்ட் ஜெனரலாக அனில் சவுகான் ஓய்வு பெற்றார்.

முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் நீலகிரியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து தற்போது புதிய தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

;