health-and-wellness

img

கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்து... தமிழகத்தில் 2 மருத்துவமனைகளில் பரிசோதனை

சென்னை
கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க 170 நாடுகள் போட்டியில் உள்ளன. சில நாடுகள் தடுப்பு மருந்தை தயாரித்து சோதனை செய்து வருகின்றன. ரஷ்யா "ஸ்புட்னிக் வி" என்ற மருந்தை கண்டுபிடித்தது 40 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்துள்ளது. 

இதே போல லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் – அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்துள்ள கோவிஷீல்ட் என்ற கொரோனா தடுப்பு மருந்தை, இந்தியாவில் பரிசோதனை மேற்கொள்ளும் உரிமத்தை மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சீரம் இன்ஸ்ட்டியூட் நிறுவனத்திற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.  

இதன்மூலம் நாட்டின் 17 நகரங்களில் உள்ள முக்கியமான மருத்துவமனைகளில் கோவிஷீல்ட் தடுப்பு மருந்து பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் ராமச்சந்திரா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விரைவில்  அங்கு  கோவிஷீல்ட் பரிசோதனை செய்யப்பட உள்ளது. 

;