health-and-wellness

img

தமிழ்நாட்டில் பெண்களுக்கு முழு புற்றுநோய் பரிசோதனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை,மார்ச்.24- பெண்களுக்கு முழு புற்றுநோய் பரிசோதனை இன்னும் 10 நாட்களில் தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தியாவிலேயே முதல் முறையாக, மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து புற்றுநோய்களையும் கண்டறியும், முழு பரிசோதனை இன்னும் 10 நாட்களில் வருவாய் மாவட்ட அளவில் தொடங்க உள்ளது என அறிவித்தார்.
மேலும் இளம் சிறுமிகளுக்குக் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க HPV தடுப்பூசியை, தமிழ்நாடு அரசின் தடுப்பூசி அட்டவணையில் சேர்க்க ரூ.37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.