headlines

img

அமைச்சர் பேச்சு உணர்த்தும் பெரிய உண்மை

நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிப்பது பற்றி அரசு இது வரை எந்த முடிவும் செய்யவில்லை என்று நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்திருக்கிறார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோ தமாக, மத அடிப்படையில் குடியுரிமையைத் தீர் மானிக்கக் கூடிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை சுற்றி வளைத்து நியாயப்படுத்தும் வஞ்சக நிலைப் பாட்டையே பாஜக அரசு தொடர்ந்து வருகிறது. இந்த சட்டத்தின் அடுத்த நடவடிக்கையாகவும், தொடர்ச்சியாகவும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பும், தேசிய குடிமக்கள் பதி வேடும் அமைந்துள்ளன. குறிப்பாக குடிமக்கள் பதிவேட்டுக்கு முன்னோட்டமாகவே, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை தயாரிக்கப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு இருக்கிறது எனும் வலு வான குற்றச்சாட்டை மத்திய அரசு மறுக்க முடிய வில்லை.

ஏனென்றால், தேசிய மக்கள்தொகை பதி வேட்டுக்கு கேட்கப்படும் கேள்விகள் குறித்த அதிகாரப்பூர்வ படிவம் இதுவரை வெளியிடப்பட வில்லை. ஆனால் சோதனை முயற்சியாக கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட மக்கள்தொகை பதி வேட்டுக்கான கேள்விப் படிவத்தில் தாய், தந்தை யின் பிறந்த இடம், அவர்கள் கடைசியாக குடியிருந்த இடம் உள்பட 21 விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன. அரசின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்துவதாக உள்ளது.

இந்த சூழ்நிலையில்தான் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ள அமைச்சர் நித்யானந்த் ராய், மக்கள்தொகை பதிவேட்டுப் பணியில் கேட்கப் படும் கேள்விகளுக்கு மக்கள் எந்த ஆவணத்தை யும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை, ஆதார் கார்டு சமர்ப்பிப்பதுகூட அவர்களது தனிப்பட்ட விருப்பத் திற்குரியதுதான் என்று எழுத்துப்பூர்வமாக கூறி யுள்ளார்.  வலுவாக நடந்து வரும் போராட்டங்களின் பின்னணியில்தான் பிரதமர் மோடி என்ஆர்சி குறித்து விவாதிக்கவில்லை என வெளியே பேசி வந்தார். இப்போது அவரது அரசு, நாடாளுமன்றத் தில் பின்வாங்குவது போல கொஞ்சம் பம்மி யுள்ளது. ஆனால் இதுவே முடிவல்ல.

ஏனென்றால், கடந்த டிசம்பர் 9ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளு மன்றத்தில் பேசுகையில், இந்நாட்டில் தேசிய குடி மக்கள் பதிவேட்டை நிறைவேற்றுவது எங்கள் திட்டம் என பகிரங்கமாகவே அறிவித்தார்.

மதச்சார்பற்ற இந்தியாவின் இதயத்தில் பாய்ச்சப்படும் திரிசூலமாக உருவாக்கப்பட்டி ருக்கும் இம்மூன்று சட்ட நடைமுறைகளையும் முனை மழுங்கச் செய்து குப்பைத் தொட்டிக்கு வீசும் வரை அனைத்து தேசப்பற்றாளர்களின் ஜன நாயகப் போராட்டம் தொடர வேண்டும். இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இப்போது அடக்கி வாசித்த பதிலுரை என்பது இதுவரை தொடரும் போராட்டங்களுக்கான ஒரு சிறு விளைவு மட்டும்தான். ஆனால் ஆர்எஸ்எஸ் குரு பீடத்தால் வழிநடத்தப்படும் அமித் ஷாவின் அறிவிப்பை மொத்தமாகக் கைகழுவச் செய்வதற்கு  வீரியமிக்க போராட்டம் இனியும் தொடர வேண்டும் என்ற பெரிய உண்மையையே இது உணர்த்துகிறது.

;