headlines

img

கடன் சுமையிலும் இந்தியாவுக்கே முதலிடம்

உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நாடு களில், பெருமளவில் கடன்சுமை கொண்ட நாடாக  இந்தியா முதலிடத்தில் இருக்கிறது என்று ப்ளூம்பெர்க்  நிதி ஆய்வு நிறுவனம் தெரிவித்தி ருக்கிறது. 

தற்போது இந்தியாவில் நிலவும் பொருளாதார சூழலில் ஏற்கனவே கொடுத்த கடனை வசூலிப்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கி றது. என்பிஎப்சி என்று அழைக்கப்படும்  வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வழங்கியிருக்கும் கடன்களை திரும்பி வசூலிக்க முடியாமல் தவிக் கின்றன. கடன் வாங்கிய பல நிறுவனங்கள் திவால் ஆகியும் வருகின்றன. 2018 ஜூனில் 186 ஆக இருந்த திவால் வழக்கு எண்ணிக்கை 2019 ஜூனில் 445 ஆக உயர்ந்திருக்கிறது. இது ஆபத்தான அறிகுறியாகும். புதிதாக கடன் கொடுக்கவும் பணம் இல்லை என்ற நிலை இருந்து  வருகிறது என ப்ளூம்பெர்க் தெரிவித்திருக்கிறது. 

ஏற்கனவே இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையாக வீழ்ச்சியடைந்திருக்கிறது.  புதிய வேலைவாய்ப்புகள் இல்லாததோடு, இருக்கும் வேலைவாய்ப்புகளும் பறிபோகும் நிலை தொடர்கிறது.  இதன் காரணமாக மக்களின்  வாங்கும் திறன் குறைந்து நுகர்வு விகிதமும் வீழ்ச்சி யடைந்திருக்கிறது. ஏற்றுமதியும் கடுமையாக குறைந்திருக்கிறது. ஏற்றுமதிக்கும் இறக்கு மதிக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறை 1758 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது. இந்தியா வில் இருந்து அதிகமாக ஏற்றுமதி செய்யும் 30 பொருட்களில் 17 பொருட்களின் வர்த்தகம் கடு மையாக வீழ்ச்சியடைந்திருக்கிறது.

இதன் விளைவாக ஏற்பட்டுள்ள உற்பத்தி தேக்கதை தொடர்ந்து நிறுவனங்கள் உற்பத்தி யை வெகுவாக குறைத்து வருகின்றன. அப்படி குறைக்கும் போது அந்நிறுவனத்தின் ஊழி யர்களின் வேலையும் பறி போகிறது. இந்திய பொருளாதார வளர்ச்சி 8சதவிகிதத்தில் இருந்து 4.5 சதவிகிதமாக சரிந்திருக்கிறது. உண்மை யான கணக்குப்படி பார்த்தால் 3 சதவிகிதம் தான் என்று மத்திய அரசின் முன்னாள் பொரு ளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் தெரிவித்திருக்கிறார். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல ஜிஎஸ்டி வரியை உயர்த்தப் போவதாக மத்திய அரசு அறிவித்து, அதற்கான இலக்கை 1.1லட்சம் கோடியாக உயர்த்தியிருக்கிறது.

இந்திய பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்ச மாக சர்வநாசமாக்கி வருகிறது. ஆனால் இது குறித்து கவலை கொள்ளாமல் மதத்தின் பெயரால் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு கலவரங்களை உருவாக்கி மக்களை திசைதிருப்புவதிலேயே குறியாக இருக்கிறது மோடி அரசு.  நாசகர பொ ருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றுவது டன், மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்கள் மீதான தாக்குதல்களை யும் மிகவும் மூர்க்கத்தனமான முறையில் தொடுத்து வருகிறது. 

இந்த நாசகர ஆட்சிக்கெதிராக அனைத்து பகுதி மக்களும் ஒன்றுதிரண்டு இந்த தேசத்தை பாதுகாத்திட வேண்டும்.

;